பொத்துவில் தாஜகான்-
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் வருடாந்த மாணவர் பரிசளிப்பு விழாவும், அதிதிகள் கௌரவிப்பும் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் (2016.11.10) அறபாவின் திறந்த வெளியரங்கில் மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறபாவின் ஆளுமைகள் எனும் மகுடத்தில் பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக சேவைகள் கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களும் நட்சத்திர அதிதியாக கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெவ்வை (ஜேபி) அவர்களும் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசீம் அவர்களும் விசேட அதிதியாக எம்.ஏ. சி கஸ்ஸாலி கோட்டக்கல்விப் பணிப்பாளர் அவர்களும் சிறப்பு அதிதியாக உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிர் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
இந்நிகழ்வில் புலமைப்பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் அதிதிகளுக்கான பரிசளிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.