இலங்கை பாராளுமன்றத்திற்குள் வேலை வாய்ப்பு - விபரம்

பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட் தொகுதியில் கீழ்காணும் பதவிகளுக்கு நல்ல தேகாரோக்கியமும் மற்றும் சிறந்த நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதன் கீழ் காணப்படும் மாதிரிப்படிவத்திற்கு அமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள்2016.11.15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக, 'பாராளுமன்றச் செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர, கோட்டே' எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் 'விண்ணப்பிக்கப்படும் பதவியின்' பெயர் குறிப்பிடுதல் வேண்டும்.

சமையற்காரர்

1. சம்பள அளவுத்திட்டம்

வருடாந்த திரட்டு சம்பள அளவுத்திட்டம் ரூ.176,040-11x1,920/10x2,220-219,360 (அனைத்து மேலகக் கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்த சம்பள அளவுத் திட்டத்திற்குரிய ஆரம்ப சராசரி மாதாந்தச் சம்பளம் ரூ.48,790/-) ஆகும்.

சமையற்காரர் பதவியில் 10 வருட திருப்திகரமான சேவை காலத்தை பூர்த்தி செய்யும் சமையற்காரர் ஒருவர் சிரேஷ்ட சமையற்காரர் பதவிக்கு பதவியுயர்த்தப் படுவார் என்பதுடன் ரூ. 187,560-3x2,220/10x2,580/4x3,840-235,380 என்ற வருடாந்த சம்பள அளவுத்திட்டத்தில் அமர்த்தவும்படுவார் (அனைத்து மேலாகக் கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்த சம்பள அளவுத் திட்டத்திற்குரிய ஆரம்ப சராசரி மாதாந்தச் சம்பளம் ரூ. 50,597/-) ஆகும்.

2. வயதெல்லை

விண்ணப்பப்டிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு 25 வயதுக்குக் குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. தொழில்சார் தகைமைகள்

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகம் (SLITHM) அல்லது இணையான அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல் பாடசாலை ஒன்றிலிருந்து ஆரம்ப மட்டத்திலான சமையல்கலை பற்றிய (இலங்கை / சர்வதேச) பாடநெறி சான்றிதழைப் பெற்றிருத்தல் வேண்டும்.

4. அனுபவம்

4 நட்சத்திர அல்லது 5 நட்சத்திர ஹோட்டலொன்றில் சமையற்காரராக 5 வருடத்திற்குக் குறையாத தொழில் அனுபவமும் இலங்கை உணவுகளுக்கு மேலதிகமாக இந்திய, அரேபிய, சீன, மொங்கோலிய, ஜப்பானிய, இத்தாலிய, தாய்லாந்து /சிங்கள இனிப்புப் பலகாரங்கள் அல்லது பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி உணவுகளை தயாரிக்கும் ஆற்றலும் மேலதிகத் தகைமைகளாகக் கருதப்படும்.

5. ஆட்சேர்ப்பு நடைமுறை

தொழில் ரீதியான பரீட்சை மற்றும் /நோ்முகப் பரீட்சை மூலம் ஆட்சோ்த்துக் கொள்ளப்படும்.

6. சேவை நியதிகளும், நிபந்தனைகளும்

(i) இந்தப் பதவிகள் நிரந்தரமானவையாகும். இப்பதவிகளுக்கான ஓய்வூதிய உரித்து எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானத்திற்கு இணங்க தீர்மானிக்கப்படும். தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் முதலில் மூன்று (03) வருட தகுதிகாண் காலத்திற்கு உட்படுத்தப் படுவதுடன், அரசாங்க சேவையில் அல்லது மாகாண அரசாங்க சேவையில் நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய பதவியொன்றில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஆளொருவர் தெரிவு செய்யப்படுமிடத்து ஒரு வருட கால பதில் கடமையாற்றும் அடிப்படையில் நியமிக்கப்படுவார்.

(ii) தெரிவு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட் தொகுதிக்கு ஏற்புடையதான நிதி மற்றும் திணைக்கள ஒழுங்கு விதிகளுக்கு இயைந்தொழுகுதல் வேண்டும். இவர்கள் மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.

(iii) தெரிவு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தொடர்பான பாதுகாப்பு பற்றிய சான்றறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்படும்.

7. விண்ணப்பதாரர்கள் பின்வரும் சான்றிதழ்களின் பிரதிகளை (மூலப் பிரதிகள் அல்ல) தமது விண்ணப்பங்களுடன் இணைத்தனுப்புதல் வேண்டுமென்பதுடன், மூலப் பிரதிகளைக் கோரும் பட்சத்தில் அவற்றைச் சமர்ப்பித்தலும் வேண்டும்.

(அ) பிறப்புச் சான்றிதழ்

(ஆ) கல்வித் தகைமைகள் பற்றிய சான்றிதழ்கள்

(இ) தொழில்சார் தகைமைகளை உறுதி செய்வதற்கான சான்றிதழ்கள்

(ஈ) அனுபவத்தை உறுதிசெய்வதற்கான சான்றிதழ்

8. அரசாங்க சேவையில் / மாகாண அரசாங்க சேவைகளில் / அரச கூட்டுத்தாபனங்களில் / நியதிச்சட்டசபைகளில் பணியாற்றும் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை தத்தமது திணைக்கள / நிறுவனத் தலைவரினூடாக அனுப்பி வைத்தல் வேண்டும்.

9. பதவியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் ஏதேனுமொரு வகையில் செல்வாக்கைப் பிரயோகித்தலானது தகுதியின்மைக்கு வழிவகுக்கும்.

10. விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விடயம் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் தவறு எனக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தகுதி அற்றவர் எனக் குறிப்பிடப்படுவதற்கும், நியமனத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் சேவையிலிருந்து நீக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.

11. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறுகின்ற அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்கள் இன்றி அனுப்பப் படுகின்ற அல்லது திணைக்கள / நிறுவனத் தலைவர்களினூடாக அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதிக்குப் பின்னர் திணைக்கள / நிறுவனத் தலைவர்களின் ஊடாக கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பங்களும், மாதிரிப் படிவத்திற்கு அமைய தயாரிக்கப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

தொழில்நுட்ப உத்தியோகத்தர் (மின்னியல்)

1. சம்பள அளவுத்திட்டம்

வருடாந்த திரட்டு சம்பள அளவுத்திட்டம் ரூ. 200,640-9x3,840/3x4,380-248,340/-(அனைத்து மேலாகக் கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்த சம்பள அளவுத் திட்டத்திற்குரிய ஆரம்ப சராசரி மாதாந்தச் சம்பளம் ரூ.52,500/-) ஆகும்.

தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவியில் (மின்னியல்)10 வருட திருப்தியான சேவை காலத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்கின்ற மின்னியலாளர் ஒருவர் சிரேஷ்ட மின்னியலாளர் பதவிக்கு பதவியுயர்த்தப்படுவதுடன் ரூ.235,200-12x4,380-287,760/- என்ற வருடாந்த சம்பள அளவுத்திட்டத்தில் அமர்த்தவும் படுவார் (அனைத்து மேலகக் கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்த சம்பள அளவுத்திட்டத்திற்குரிய ஆரம்ப சராசரி மாதாந்தச் சம்பளம் ரூ.58,000/-) ஆகும்.

2. வயதெல்லை

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று 18 வயதுக்குக் குறையாமலும் 40 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

3. கல்வித் தகைமைகள்

விண்ணப்பதாரர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் நான்கு பாடங்களில் அல்லது புதிய பாடத்திட்டத்தின் கீழ் மூன்று பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

4. தொழிற்றகைமைகள்

தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா (NDT)
(மின்னியல்/ இலத்திரனியல் / தொலைத்தொடர்பு)
அல்லது
உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா (HNDE)
(மின்னியல் / இலத்திரனியல் / தொலைத்தொடர்பு)
அல்லது

தேசிய பொறியியல் டிப்ளோமா (NDES)
(மின்னியல்/ இலத்திரனியல் / தொலைத்தொடர்பு)
அல்லது
திறந்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப டிப்ளோமா
(மின்னியல் / இலத்திரனியல் / தொலைத்தொடர்பு)

5. அனுபவம்

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் உரிய துறையில் ஆகக்குறைந்தது மூன்று வருட சேவை அனுபவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் (மின்னியல் மற்றும் தொடர்பாடல் துறைகளில் அனுபவமுடைய விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்).

6. ஆட்சேர்ப்பு முறை

எழுத்துமூலப் பரீட்சை மற்றும் /நேர்முகப் பரீட்சை மூலம் ஆட்சேர்த்துக் கொள்ளப்படும்.

7. சேவை நியதிகளும், நிபந்தனைகளும்

(i) இந்தப் பதவிகள் நிரந்தரமானவையாகும். இப்பதவிகளுக்கான ஓய்வூதிய உரித்து எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானத்திற்கு இணங்க தீர்மானிக்கப்படும். தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் முதலில் மூன்று (03) வருட தகுதிகாண் காலத்திற்கு உட்படுத்தப் படுவதுடன், அரசாங்க சேவையில் அல்லது மாகாண அரசாங்க சேவையில் நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய பதவியொன்றில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஆளொருவர் தெரிவு செய்யப்படுமிடத்து ஒரு வருட கால பதில் கடமையாற்றும் அடிப்படையில் நியமிக்கப்படுவார்.

(ii) தெரிவு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட் தொகுதிக்கு ஏற்புடையதான நிதி மற்றும் திணைக்கள ஒழுங்கு விதிகளுக்கு இயைந்தொழுகுதல் வேண்டும். இவர்கள் மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.

(iii) தெரிவு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தொடர்பான பாதுகாப்பு பற்றிய சான்றறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்படும்.

8. விண்ணப்பதாரர்கள் பின்வரும் சான்றிதழ்களின் பிரதிகளை (மூலப் பிரதிகள் அல்ல) தமது விண்ணப்பங்களுடன் இணைத்தனுப்புதல் வேண்டுமென்பதுடன், மூலப் பிரதிகளைக் கோரும் பட்சத்தில் அவற்றைச் சமர்ப்பித்தலும் வேண்டும்.

(அ) பிறப்புச் சான்றிதழ்
(ஆ) கல்வித் தகைமைகள் பற்றிய சான்றிதழ்கள்
(இ) தொழில்சார் தகைமைகளை உறுதி செய்வதற்கான சான்றிதழ்கள்
(ஈ) அனுபவத்தை உறுதிசெய்வதற்கான சான்றிதழ்

9. அரசாங்க சேவையில் / மாகாண அரசாங்க சேவைகளில் / அரச கூட்டுத்தாபனங்களில் / நியதிச்சட்டசபைகளில் பணியாற்றும் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை தத்தமது திணைக்கள / நிறுவனத் தலைவரினூடாக அனுப்பி வைத்தல் வேண்டும்.

10. பதவியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் ஏதேனுமொரு வகையில் செல்வாக்கைப் பிரயோகித்தலானது தகுதியின்மைக்கு வழிவகுக்கும்.

11. விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விடயம் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் தவறு எனக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தகுதி அற்றவர் எனக் குறிப்பிடப்படுவதற்கும், நியமனத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் சேவையிலிருந்து நீக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.

12. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறுகின்ற அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்கள் இன்றி அனுப்பப் படுகின்ற அல்லது திணைக்கள / நிறுவனத் தலைவர்களினூடாக அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதிக்குப் பின்னர் திணைக்கள / நிறுவனத் தலைவர்களின் ஊடாக கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பங்களும், மாதிரிப் படிவத்திற்கு அமைய தயாரிக்கப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

தளபாடங்கள் மெருகூட்டுனர்

1. சம்பள அளவுத்திட்டம்

வருடாந்த திரட்டு சம்பள அளவுத்திட்டம் ரூ.163,860 - 9 x1,740/10 x 1,920/3 x 2,220-205,380 (அனைத்து மேலகக் கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்த சம்பள அளவுத் திட்டத்திற்குரிய ஆரம்ப சராசரி மாதாந்தச் சம்பளம் ரூ.46,912/-) ஆகும்.

தளபாடங்கள் மெருகூட்டுனர் பதவியில் 10 வருட திருப்திகரமான சேவை காலத்தை பூர்த்தி செய்யும் தளபாடங்கள் மெருகூட்டுனர் ஒருவர் சிரேஷ்ட தளபாடங்கள் மெருகூட்டுனர் பதவிக்கு பதவியுயர்த்தப்படுவார் என்பதுடன் ரூ.176,040 - 11 x 1,920 / 10 x 2,220 - 219,360 என்ற சம்பள அளவுத் திட்டத்தில் அமர்த்தவும்படுவார். (அனைத்து மேலாகக் கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்த சம்பள அளவுத் திட்டத்திற்குரிய ஆரம்ப சராசரி மாதாந்தச் சம்பளம் ரூ. 48,790/-) ஆகும்.

2. வயதெல்லை

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு 21 வயதுக்குக் குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. கல்வித் தகைமை

க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம், சிங்களம் அல்லது தமிழ் மொழி ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக மூன்று (03) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

4. அனுபவம்

அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் குறித்த துறையில் 03 வருட கால அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டிருத்தல்.

5. ஆட்சேர்ப்பு முறை

எழுத்துமூல மற்றும்/ தொழில் ரீதியான பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் ஆட்சோ்த்துக்கொள்ளப்படும்.

6. சேவை நியதிகளும், நிபந்தனைகளும்

(i) இந்தப் பதவிகள் நிரந்தரமானவையாகும். இப்பதவிகளுக்கான ஓய்வூதிய உரித்து எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானத்திற்கு இணங்க தீர்மானிக்கப்படும். தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் முதலில் மூன்று (03) வருட தகுதிகாண் காலத்திற்கு உட்படுத்தப் படுவதுடன், அரசாங்க சேவையில் அல்லது மாகாண அரசாங்க சேவையில் நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய பதவியொன்றில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஆளொருவர் தெரிவு செய்யப்படுமிடத்து ஒரு வருட கால பதில் கடமையாற்றும் அடிப்படையில் நியமிக்கப்படுவார்.

(ii) தெரிவு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட் தொகுதிக்கு ஏற்புடையதான நிதி மற்றும் திணைக்கள ஒழுங்கு விதிகளுக்கு இயைந்தொழுகுதல் வேண்டும். இவர்கள் மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.

(iii) தெரிவு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தொடர்பான பாதுகாப்பு பற்றிய சான்றறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்படும்.

7. விண்ணப்பதாரர்கள் பின்வரும் சான்றிதழ்களின் பிரதிகளை (மூலப் பிரதிகள் அல்ல) தமது விண்ணப்பங்களுடன் இணைத்தனுப்புதல் வேண்டுமென்பதுடன், மூலப் பிரதிகளைக் கோரும் பட்சத்தில் அவற்றைச் சமர்ப்பித்தலும் வேண்டும்.

(அ) பிறப்புச் சான்றிதழ்

(ஆ) கல்வித் தகைமைகள் பற்றிய சான்றிதழ்கள்

(இ) தொழில்சார் தகைமைகளை உறுதி செய்வதற்கான சான்றிதழ்கள்

(ஈ) அனுபவத்தை உறுதிசெய்வதற்கான சான்றிதழ்

8. அரசாங்க சேவையில் / மாகாண அரசாங்க சேவைகளில் / அரச கூட்டுத்தாபனங்களில் / நியதிச்சட்டசபைகளில் பணியாற்றும் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை தத்தமது திணைக்கள / நிறுவனத் தலைவரினூடாக அனுப்பி வைத்தல் வேண்டும்.

9. பதவியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் ஏதேனுமொரு வகையில் செல்வாக்கைப் பிரயோகித்தலானது தகுதியின்மைக்கு வழிவகுக்கும்.

10. விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விடயம் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் தவறு எனக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தகுதி அற்றவர் எனக் குறிப்பிடப்படுவதற்கும், நியமனத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் சேவையிலிருந்து நீக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.

11. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறுகின்ற அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்கள் இன்றி அனுப்பப் படுகின்ற அல்லது திணைக்கள / நிறுவனத் தலைவர்களினூடாக அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதிக்குப் பின்னர் திணைக்கள / நிறுவனத் தலைவர்களின் ஊடாக கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பங்களும், மாதிரிப் படிவத்திற்கு அமைய தயாரிக்கப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

பொருட்கள் ஏற்கும் உதவியாளர்.

1. சம்பள அளவுத்திட்டம்

வருடாந்த திரட்டு சம்பள அளவுத்திட்டம் ரூ. 148,080-9x1,560/10x 1,740/ 6x1,920-191,040 (அனைத்து மேலகக் கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்த சம்பள அளவுத் திட்டத்திற்குரிய ஆரம்ப சராசரி மாதாந்தச் சம்பளம் ரூ.44,480/-) ஆகும்.

பொருட்கள் ஏற்கும் உதவியாளர் பதவியில் 10 வருட திருப்தியான சேவை காலத்தை பூர்த்தி செய்யும் பொருட்கள் ஏற்கும் உதவியாளர் ஒருவர் சிரேஷ்ட பொருட்கள் ஏற்கும் உதவியாளர் பதவியுயர்த்தப்படுவார் என்பதுடன் ரூ.163,860-9x1,740/ 10x1,920/3x2,220-205,380 என்ற சம்பள அளவுத் திட்டத்தில் அமர்த்தவும்படுவார் (அனைத்து மேலகக் கொடுப்பனவுகளும் அடங்கலாக இந்த சம்பள அளவுத்திட்டத்திற்குரிய ஆரம்ப சராசரி மாதாந்தச் சம்பளம் ரூ.46,911/-) ஆகும்.

2. வயதெல்லை

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு 18 வயதுக்குக் குறையாதவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. கல்வித் தகைமைகள்

சிங்கள மொழியில் அல்லது தமிழ் மொழியில் திறமைச் சித்தியுடன் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சித்தியுடன் கல்விப் பொதுத் தராதரப் (க.பொ.த.) பரீட்சையில் ஆறு பாடங்களில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாத தடவைகளில் சித்தியெய்திருத்தல் வேண்டும்.

4. தொழில்சார் தகைமைகள்

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகத்தினால் (SLITHM) / தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் (NAITA) / இலங்கை வாழ்க்கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் (VTA) அல்லது அதற்கு இணையான வாழ்க்கைத்தொழில் பயிற்சி நிறுவகத்தினால் நடாத்தப்படும் 05 மாதங்களுக்குக் குறையாத சமையல் கலை சான்றிதழ் பாடநெறியை / ஆரம்ப உணவு பான சான்றிதழ் பாடநெறியை பின்பற்றி வெற்றிகரமாக நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

5. அனுபவம்

ஹோட்டல் துறையில் பொருட்கள் ஏற்கும் உதவியாளர்/சமையல் உதவியாளர் / உணவு விடுதி உதவியாளர் பதவியில் அல்லது அதற்கு இணையான ஒரு பதவியில் 06 மாதங்களுக்கு குறையாத காலம் சேவை செய்திருத்தல் வேண்டும்.

6. ஆட்சேர்ப்பு முறை

எழுத்துமூல மற்றும் / நோ்முகப் பரீட்சை மூலம் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.

7. சேவை நியதிகளும், நிபந்தனைகளும்

(i) இந்தப் பதவிகள் நிரந்தரமானவையாகும். இப்பதவிகளுக்கான ஓய்வூதிய உரித்து எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானத்திற்கு இணங்க தீர்மானிக்கப்படும். தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் முதலில் மூன்று (03) வருட தகுதிகாண் காலத்திற்கு உட்படுத்தப் படுவதுடன், அரசாங்க சேவையில் அல்லது மாகாண அரசாங்க சேவையில் நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய பதவியொன்றில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஆளொருவர் தெரிவு செய்யப்படுமிடத்து ஒரு வருட கால பதில் கடமையாற்றும் அடிப்படையில் நியமிக்கப்படுவார்.

(ii) தெரிவு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட் தொகுதிக்கு ஏற்புடையதான நிதி மற்றும் திணைக்கள ஒழுங்கு விதிகளுக்கு இயைந்தொழுகுதல் வேண்டும். இவர்கள் மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.

(iii) தெரிவு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தொடர்பான பாதுகாப்பு பற்றிய சான்றறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்படும்.

8. விண்ணப்பதாரர்கள் பின்வரும் சான்றிதழ்களின் பிரதிகளை (மூலப் பிரதிகள் அல்ல) தமது விண்ணப்பங்களுடன் இணைத்தனுப்புதல் வேண்டுமென்பதுடன், மூலப் பிரதிகளைக் கோரும் பட்சத்தில் அவற்றைச் சமர்ப்பித்தலும் வேண்டும்.

(அ) பிறப்புச் சான்றிதழ்

(ஆ) கல்வித் தகைமைகள் பற்றிய சான்றிதழ்கள்

(இ) தொழில்சார் தகைமைகளை உறுதி செய்வதற்கான சான்றிதழ்கள்

(ஈ) அனுபவத்தை உறுதிசெய்வதற்கான சான்றிதழ்

9. அரசாங்க சேவையில் / மாகாண அரசாங்க சேவைகளில் / அரச கூட்டுத்தாபனங்களில் / நியதிச்சட்டசபைகளில் பணியாற்றும் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை தத்தமது திணைக்கள / நிறுவனத் தலைவரினூடாக அனுப்பி வைத்தல் வேண்டும்.

10. பதவியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் ஏதேனுமொரு வகையில் செல்வாக்கைப் பிரயோகித்தலானது தகுதியின்மைக்கு வழிவகுக்கும்.

11. விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விடயம் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் தவறு எனக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தகுதி அற்றவர் எனக் குறிப்பிடப்படுவதற்கும், நியமனத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் சேவையிலிருந்து நீக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.

12. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறுகின்ற அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்கள் இன்றி அனுப்பப் படுகின்ற அல்லது திணைக்கள / நிறுவனத் தலைவர்களினூடாக அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதிக்குப் பின்னர் திணைக்கள / நிறுவனத் தலைவர்களின் ஊடாக கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பங்களும், மாதிரிப் படிவத்திற்கு அமைய தயாரிக்கப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -