காரைதீவு நிருபர் சகா-
அதன் ஒரு கட்டமாக அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உறவுகள; மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வறிய நிலை மாணவர்களின் கல்வியை உயர்த்தும் நோக்குடனும் அவுஸ்திரேலியா அன்பாலயம் என்ற அமைப்பு ஊடாக நேற்று பாடசாலை மாணவர்களுக்கான 15 துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தன.
மட்டக்களப்பு படுவான்கரையில் மிகவும் பின்தங்கிய மகிழவெட்டவான் கன்னன்குடா மங்கிக்கட்டு நால்காடு வவுணதீவு ஆகிய பிரதேச ஏழை மாணவர்களின் கல்விக்காக 15துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
வவுணதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல்பணிப்பாளர் எஸ்.நிர்மலராஜ்திட்டஅலுவலர் எஸ்.மனோகரன் அமைப்பின் இணைப்பாளர் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ் ஆகியோர் கலந்தகொண்டு அவற்றை வழங்கிவைத்தனர்.
ஏலவே புதுவாழ்வும் புனர்வாழ்வும் என்ற லண்டன் தமிழர்அமைப்பினூடாக இதே பிரதேசத்தில் 05 துவிச்சக்கரவண்டிகள் ஏழை மாணவர்களின் கலவிக்காக வழங்கப்பட்டன. அதனையும் புதுவாழ்வும் புனர்வாழ்வும் அமைப்பின் இணைப்பாளர் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ் வழங்கிவைத்தார்.