அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்திலுள்ள அதிபர் தரத்திலுள்ள 336 பேருக்கும் இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் நியமனம் வழங்குவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபானி இன்று (09) தெரிவித்தார்.
2016-05-09ம் திகதி முதல் அதிபர் தரத்திற்கு தெரிவாகியும் தங்களுக்கு பாடசாலை வழங்கப்படவில்லையெனவும் தாங்கள் பாடசாலைகளில் ஆசிரியர்களாகவே கடமையாற்றி வருவதாகவும் தெரிவித்து தங்களுக்கு அதிபர் தரத்திற்குறிய நியமனத்தை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு முன்னால் காலை 10.00 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர.
இந்ந ஆர்பாட்டத்தின் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலி கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருடன் சந்திப்பிலும் ஈடுபட்டனர்.
இதன் போதே கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி இவ்விடயத்தை தெரிவித்தார்.