நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தினை கையளிக்கும் நோக்கில் மழையும் பாராது விரைந்த குழு (படங்கள்)

க்கரைப்பற்று, நுரைச்சோலை கிராமத்தில் கடந்த சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதிஅரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் அன்றய அரசின் வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரபின் முயற்சியினால் கட்டி முடிக்கப்பட்ட 500 வீடுகள் இதுவரை அம்மக்களிடம் வழங்கப்படாமல் பற்றைக் காடுகளாகக் காட்சி தரும் நிலமையில் உள்ளதை  இன்று  (18)  மாலை  நேரில் பார்வையிட கிழக்கு மாகாண சபையின் அம்பாரை மாவட்ட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீரின் முயற்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பின் பேரில்  சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரி விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். 

அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை வந்தடைந்த சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரியை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர். மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.மாஹிர். ஏ.எல்.தவம் ஆகியோர் வரவேற்று வீடுகளையும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டிடங்களையும் காண்பித்த பின்னர் வருகை தந்த சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரி இதற்கான  இது பற்றி விரைவில் நல்லதொரு முடிவு எடுக்கவுள்ளதாகவும் மக்களுக்கு வழங்க வேண்டிய தேவை உள்ளதுடன் இதனை மீள சீர்செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மழை காரணமாக சரியான முறையில் பார்வையிட முடியா விட்டாலும் குறித்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் சேதமடைந்துள்ள வீடுகளையும் திருத்திக் கொள்ள தேவையான நிதிகளை முதலமைச்சரின் ஊடாக வழங்குவதாகவும், முழு விபரம் அடங்கிய தகவல்களை மேலும் தருமாறும்  சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் கேட்டுக்கொண்டார்.  

இவ்விஜயத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் மற்றும் புத்தி ஜீவிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -