க.கிஷாந்தன்-
நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்கள் பாடசாலையான நுவரெலியா புனித சவரியர் கல்லூரியில் கடந்த வருடம் வெளி மாவட்ட மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன என மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப்பட்டு அங்கு கடமையாற்றிய அதிபர் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து வெளிமாவட்ட மாணவர்களை சேர்த்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இப்பாடசாலைக்கு அதிபர் ஒருவரை நியமிக்குமாறும் கோரி பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
இப்பாடசாலைக்கு அதிபர் நியமிப்பதில் இழுபறி நிலையே காணப்பட்டன பின் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைய அட்டன் கல்வி வலயத்தில் டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் ஏ.ஜே.நிகலஸ் இப்பாடசாலைக்கு இடம் மாற்றப்பட்டு அவர் 03.11.2016 அன்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடமை பொறுப்பேற்றுக்கொண்ட அதிபர் நிக்கலஸ் அவர்களுக்கு மகத்தான வரவேற்று வழங்கப்பட்டதுடன் சரியார் புனித ஆலயத்தில் ஆசீர்வாத பூஜையூம் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து பாடசாலையின் வரலாறு அடங்கிய நூல் ஒன்று பழைய மாணவர்களால் அதிபர் அவர்களுக்கு கையளிக்கப்பட்டன.
தமிழ் மற்றும் சிங்கள மொழியில் ஆண்கள் மாத்திரம் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் இக்கல்லூரியில் சுமார் 570 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இந்நிகழ்லுக்கு வண பங்கு தந்தையர்கள் உட்பட பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.