வடக்கு கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் - பிரதமர்

வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விமானப் பயண வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே, ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்காமல் அவர்களிடம் மேலதிக பொறுப்புணர்வுகளை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அவர்களுக்கு தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்கு 1 லட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அமெரிக்கா, இந்தியாவில் விமானப் பயணச்சீட்டுகள் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம், விமானப்பயண வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -