அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- கிண்ணியா -சூரங்கல் பகுதியில் 15 வயது கர்ப்பிணிப்பெண்னை கழுத்து நெறித்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில்கைது செய்யப்பட்ட கணவரை டிசம்பர் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றத்தின் பிரதம நீதவான் டி.சரவணசாஜா நேற்று மாலை (21) உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கிண்ணியா-சூரங்கல் சாந்தி நகரைச்சேர்ந்த அஹமட் பிர்னாஸ் (18வயது) எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
முந்திய செய்தி..
கடந்த 20ம் திகதி குளியலறையில் விழுந்து உயிரிழந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட வேளை சட்ட வைத்திய அறிக்கையின் மூலம் கழுத்து நெறித்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுற்குற்பட்ட சூரங்கல் பகுதியில் 15 வயது கற்பிணிப்பெண் கழுத்து நெசிக்கப்பட்டே கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஏ.எஸ்.ஆர்.விக்ரமராய்ச்சி இன்று (21) மாலை 6.00மணியளவில் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் தெரிவித்தார்.
கிண்ணியா சூரங்கல் -சாந்திநகர் பகுதியைச்சேர்ந்த நளீம் ஜனூபா (15வயது) என்பவரே கழுத்து நசித்து கொள்ளப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கர்ப்பிணிப்பெண்ணின் கணவரான அஹமட் பிர்னாஸ் (18வயது) என்பவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (20) காலை கணவரின் வீட்டில் இருக்கும் போது குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பொலிஸாரின் விசாரணையின் போது உயிரிழந்த கர்ப்பிணிப்பெண்ணுடைய கணவரின் உறவினர்கள் குளியலறையில் விழுந்தே உயிரிழந்ததாக பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட கணவர் கடந்த 2016-10-20ம் திகதி சூரங்கல் பள்ளி வாசலில் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு முன்னர் உயிரிழந்தவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு திருமணத்திற்கு முன்னே கற்பிணியான நிலையில் அவர் (காதலனான அன் அஹமட் பிர்னாஸ்) தனக்கு இவருடன் தொடர்பில்லை என தெரிவித்தபோது கற்பிணியான பெண் இவர்தான் கற்பிணியாக்கியவர் என கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தெரிவித்தார்.
ஆனாலும் அன் அஹமட் பிர்னாஸ் தனக்கு எதுவித தொடர்பும் இல்லையென தெரிவித்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் கற்பிணிப்பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டார்.
அப்பரிசோதனையின் போது இவரின் இரத்ததத்தினால் உருவான சிசு என தெரிவிக்கப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதாக நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து உயிரிழந்த பெண்ணை திருமணம் முடித்ததாகவும் தெரியவருகின்றது.
திருமணம் 2016-10-20ம் திகதி நடைபெற்ற நாள் முதல் கற்பிணிப்பெண் இவருடன் அவரது தாயின் வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை குழியலறையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரே மரணத்தில் சந்தேகம் கொண்டனர்.
ஆனாலும் உறவினர்கள் பணம் வசதி இல்லாமையினால் இனி நடந்தது நடந்து போச்சி என கூறிக்கொண்டிருந்த வேளை பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர்.
பொலிஸாரின் விசாரணைகளின் மூலமே உறவினர்களினால் அளிக்கப்ட்ட வாக்கு மூலங்களில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் அப்போதே சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இருந்தபோதிலும் உறவினர்கள் பயத்துடன் இருந்தபோதிலும் கிண்ணியா பொலிஸார் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்ததுடன் உறவினர்கள் கணவரின் உறவினர்கள் போஸ்மோட்டம் செய்யத்தேவையில்லையென தெரிவித்தனர்.
இன்றைய தினம் சட்ட வைத்திய பரிசோதனையின் மூலம் கணவர் கழுத்தை நெசுக்கி கொன்றதாக வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்ட்டுள்ள கணவரை நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கிண்ணியா சூரங்கல் மையவாடியில் நேற்றிரவு (21) 08மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.