திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின்

எப்.முபாரக்-

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்து மில்லிகிராம் ஹோரோயின் வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெ ர்ணாண்டோ நேற்று புதன்கிழமை(16) உத்தரவிட்டார். 

 திருகோணமலை,சுமேதகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபருக்கெதிராக ஏற்கனவே ஹோரோயின் விற்பனை செய்தமை,மற்றும் வைத்திருந்தமை போன்ற வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையிலே குறித்த நபர் மீண்டும் ஐந்து மில்லிகிராம் ஹோரோயினை வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருகோணமலை தலைமையக பொலிஸார் செவ்வாய்கிழமை (15) இரவு கைது செய்ததாக தெரிவிக்கின்றனர். 

 குறித்த சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் புதன்கிழமை (16) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -