இம்மை வாழ்வும் மறுமை விசாரணையும்..

ஜுனைட்.எம்.பஹ்த்-

வீனத்தின் வளர்ச்சியில் மணிதன் இயந்திரத்தோடு போட்டி போட்டு வாழும் காலம் இது..

அறிவியலிலும், விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் மனிதன் முன்னேற்றம் கண்டாலும் தத்தமது மதம்,கலாச்சாரம் போன்றவற்றில் கடும் பின்னடைவை நோக்கிக்கொண்டிருக்குறான்..

என்னதான் அறிவியலும் தொழினுட்பமும் வளர்ந்தாலும் ஒருமனிதனுக்கு சீரான மார்க்கமும் கலாச்சாரமும் இல்லாது போனால் மனிதன் ஒழுக்கமில்லாத பிரானி போலாகிவிடுவான் இது சமூகத்தின் நிம்மதி, ஒற்றுமை, சக வாழ்வு என்பவற்றை சீர் கெடுத்துவிடும் என்பது உண்மையாகும்..

இந்த அடிப்படையில் அதிகமாக இவ்வாறான சீர்கேட்டில் பங்கெடுப்பவர்கள் இளைஞர்களே!!

இன்றைய இளைஞர்கள் வீன் விளையாட்டுக்களிலும், சினிமா மோகத்திலும், போதைப் பொருள் பாவனைகளிலும், அசிங்கமான பழக்கவழக்கங்களிலும் மூழ்கியதன் விளைவுதான்..

- பெற்றோர்கள், மூத்தவர்களை மதிக்காமை..
- மோசமான ஆடைகள்..
- அசிங்கமான முறையில் பெஷன் என்ற போர்வையில் தலை முடிகள், தாடி முடிகளை வெட்டுதல்.
- போதைப்பொருள் பாவனை..
- குற்றச் செயல்களில் ஈடுபடல்.
- மார்க்க விடயங்களில் அசமந்த போக்கு .
- மார்க்கம் ஹராமாக்கியதை விரும்பிச் செய்தல்.

போன்ற சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் பாதிப்பு செலுத்தும் செயற்பாடுகளுக்கு முக்கிய காரணம் இன்றைய இளைஞர்கள் சினிமா மோகத்திற்கும் அன்னிய கலாச்சாரத்திற்கும் போதைப் பொருள் பாவனைக்கும் அடிமையாவதே!

இவர்கள் இவ்வாறு சீர் கெட்டுப்போவதற்கு பெற்றோர்களதும் உறவினர்களின் பங்கு அதிகமாகும்.. எவ்வாறு என்றால்..

வீட்டில் ஒரு தகப்பன் அல்லது சகோதரன் அல்லது உறவினர் சிகரட் அல்லது வேறு போதைப் பொருள் பாவிக்கும் போது சிறுவர்கள் முன்னால் அல்லது அவர்கள் இருக்கும் போது பாவிப்பது அல்லது அவர்களை வாங்கிவர அனுப்புவது இவ்வாறு முட்டாள்தனமாக பெரியவர்கள் செய்கின்ற வேலை அச் சிறுவன் பெரியவனாகியது அவன் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகுவதற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

அதே போல் இன்று அதிகமான வீடுகளில் உறங்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சினிமா படங்களும், நடகங்களும், குத்தாட்டம் கூத்து என்று அந்நிய பெண்களும் ஆண்களும் அரை குறை ஆடையுடன் காமம் கலந்த நிகழ்வுகள் என ஒடிக்கொண்டே இருக்கிறது. இது அதிகமாக வீட்டில் உள்ள பெண்மனிகளின் பொழுது போக்கு இவர்களுக்கு வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளின் எதிர்காலம் கண்ணுக்கு தெரிவதில்லை. அதிலும் சிலர் தங்கள் குழந்தைகளை சினிமா பாடல் பாடச்சொல்வதும் ஆடச்சொல்வதும் ஏன் அந்த சினிமா காரர்கள் போன்று ஆடை அணிவிப்பதும் போன்ற செயற்பாட்டால் அக்குழந்தைகள் வளர்ந்து அசிங்கமான வேலைகள். செய்வதற்கு சிறு பருவத்திலேயே ஆயத்தப்படுத்துகின்றனர்..

இதுதான் நாம் தெறிந்தும் தெறியாமலும் செய்கின்ற மிகப்பெரிய தவறாகும்.. இத் தவறுக்கான தண்டனை இவ்வுலகத்தில் மட்டுமல்லாது மறு உலகத்திலும் கிடைக்கும்..

நாம் முஸ்லிம்கள் இவ்வுலக வாழ்க்கை போலியானது என நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது மறுமை வாழ்வுக்கான பரீட்சை களம்தான் இவ்வுலகமாகும்.. அல்லாஹ்வின் வாக்கான அல் குர் ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்..
“இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர
வேறில்லை” (ஆலஇம்ரான்:185)

இவ்வுலக வாழ்க்கை போலியானது என படைத்த இறைவனே கூறும் போது இவ்வுலக வாழ்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் எமது நிலை நாளை மறுமையில் எவ்வாறு இருக்கும்?

மறுமை என்றவுடன் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம், ஏதோ இறைவன் நம்மை விசாரிப்பான் பின் சுவர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ சேர்த்துவிடுவான் என்று.

அவ்வாறல்ல
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்...

மனிதர்களே! உங்களுடைய இரட்சகனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மிக்க மகத்தானதாகும். அதனை நீங்கள் காணும் அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை மறந்துவிடுவார்கள். கர்ப்பம் சுமக்கும் ஒவ்வொரு தாயும் தனது சுமையை இறக்கிவிடுவார்கள். மேலும் மதி மயக்கம் கொண்டவர்களாக மனிதர்களைக் காண்பீர்கள். அவர்கள் (மதுவினால்) மதிமயங்கியவர்களும் அல்லர். எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
(அல்-குர்ஆன் : 22:1-2)

இவ்வாறான ஒரு மறுமை நாளில் நாம் இலேசாக சுவர்க்கம் அல்லது நரகம் போகமுடியாது விசாரிக்கப்படுவோம் நாம் செய்தவை பற்றியும் நமது பொறுப்பில் உள்ள மனைவி,குழந்தைகள் பற்றியும் விசாரிக்கப்படுவோம்..

மறுமை நாளில், மனிதர்கள் அனைவரது செயலுக்குமான முதன்மை சாட்சியாளனாக அல்லாஹ் இருப்பான். அத்தோடு, மனிதர்களின் உறுப்புகளான கை, கால், தோல் முதலானவையும் மனிதர்கள் நடந்து விளையாடும் பூமியும் இன்னும் இன்னோரன்ன அம்சங்களும் சாட்சிகளாக இருக்கும் என நாம் நம்புகின்றோம். அல்லாஹ் அல் குர் ஆனில் பின்வருமாறு கூறுகிறான்..

'அன்றைய தினம் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அன்றியும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும், அவர்களது கால்களும் சாட்சி கூறும்." (36:65)

'அவர்கள் தங்களின் தோல்களிடம் எங்களுக்கு எதிராக ஏன் நீங்கள் சாட்சி கூறுகிறீர்கள் எனக் கேட்பார்கள். அதற்கு அவை, ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்தவனாகிய அல்லாஹ் தான் எங்களையும் பேசவைத்தான் என்று கூறும்." (41:21)

'அந்த நாளில் பூமி தன் செய்திகளை அறிவிக்கும். ஏனெனில் நிச்சயமாக உமது இறைவன் அதற்கு இவ்வாறு செய்யுமாறு வஹி மூலம் அறிவித்திருக்கிறான்." (99: 4-5)

'மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம். எந்தவோர் ஆத்மாவும் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. ஒரு கடுகின் வித்தளவு அது இருந்த போதிலும் அதனையும் நாம் கொண்டு வருவோம். கணக்கெடுப்பவர் களில் நமக்கு நாமே போதுமாகும்." (21:47)

'ஆகவே, எவருடைய நன்மையின் எடை கனத்ததோ, அவர் திருப்தியுள்ள வாழ்வில் இருப்பார். எவருடைய எடை இலேசானதோ, அவர் தங்குமிடம் நரகம் தான்." (102:6-9)

மனிதர்கள் இவ்வுலகில் புரிகின்ற செயல்களின் தன்மை தான் மறுமையில் அவர்களது வெற்றி தோல்வியை நிர்ணயிக் கின்றது. அன்றைய தினம், எதிர்பார்ப்புகளும் உபதேசங்களும் எவ்வித பயனுமளிக்க மாட்டாது. பரிசுத்தத் தன்மையும் தக்வாவும் இன்றி எதற்கும் பெறுமதி கிடையாது.

'ஒவ்வோர் ஆத்மாவும், தான் சம்பாதித்தவற்று க்குப் பிணையாக ஆக்கப்பட்டுள்ளது." (74: 38)

ஆகவே, உலக வாழ்க்கை சொற்பமானதே! அதே நேரம் மறுமை வாழ்க்கை நிரந்தரமானது என்பதை உணர்ந்து, மறுமை நாள் திடீரென கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்துவிடும். மரணம் நம் அருகாமையியே இருக்கிறது.

மேலும் மறுமையின் நிகழ்வுகள், அதன் வேகம், வீரியம் போன்றவற்றை கருத்தில் கொண்டு நல்ல அமல்கள் செய்வதிலும், தீமைகளை தாமதிக்காது விட்டுவிடுவதிலும், எமது பொருப்பில் உள்ளவர்களின் விடயத்திலும் கவனமெடுத்து செய்த தீமைகளை விட்டுவிட்டு உடன் தௌபாச் செய்து இனி இப்பாவத்தை செய்யமாட்டேன், எனச் சபதம் ஏற்போம்.

இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -