வெளி மாவட்ட மீனவர்களை முசலி பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறுவதை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முசலி பிரதேச சபை காரியாலயத்தின் முன்பாக நடைபெற்றது.
முசலி பகுதியை சேர்ந்த மீனவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து குறிப்பாக தென்னிலங்கை பகுதியில் இருந்து வருகை தரும் மீனவர்களை இங்கு குடியமர்த்த வேண்டாம் என்று அமைதி போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் பா.உ செல்வன் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் குணசீலன் போன்றோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன்:-
"முசலி பிரதேசமானது 30 வருட யுத்தத்தின் பின்னர் மீண்டும் மக்கள் மீள்குடியேறிவரும் ஒரு பிரதேசம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று அடிப்படை வசதிகள் பெரிதளவின்றி குடியேறிவரும் மக்களில் பெரும்பான்மையானோர் மீன்பிடியினை மையமாக கொண்டே தமது வாழிக்கையினை கொண்டு செல்கின்றனர் இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கென்று இருக்கும் வளத்தினை தென் இலங்கை மீனவர்கள் எடுத்துக்கொள்வது நாம் அனுமதிக்க முடியாத ஒன்று ஆகவே இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எமது முசலி மீனவ மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.