அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை.உப்புவௌி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கன்னியா.கிளிகுஞ்சுமலைப்பகுதியில் கணவரால் தனது மனைவியையும் இரண்டு பெண் பிள்ளைகளையும் வாளால் வெட்டி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இன்று (13) பிற்பகல் கணவரை கைது செய்துள்ளதாக உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு வாளால் வெட்டியதாக சந்தேனத்தின் பேரில் ராஜலஷ்மன் (35 வயது) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாகவது.வெட்டிக்கொல்லப்பட்டவரின் வீட்டிலிருந்து மனைவியின் அக்காவின் வீட்டுக்கு இன்று காலை இரண்டு பிள்ளைகளையும் அழைத்து வந்த போது வீட்டு உரிமையாளரான உயிரிழந்த பெண்ணின் அக்கா கடைக்கு சென்றுள்ளார்.
இதேவேளை அவ்வீட்டில் உயிரிழந்த பெண்ணின் மாமியார் ஆடு மேய்ப்பதற்காக சென்றதாகவும் பின்னர் வீட்டுக்கும் கதறும் சத்தம் கேட்டதாகவும் அயலவர்பகள் தெரிவித்தனர்.
அதனையடுத்து பொலிஸ் வீட்டு உரிமையாளரான உயிரிழந்தவரின் அக்காவிற்கு அவசரமாக தொலைபேசி அழைப்பு விடுத்ததுடன் பொலிஸ் அவசர அழைப்பிற்கு அறிவித்தல் வழங்கியதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
உப்புவௌி பொலிஸார் வந்ததையடுத்து வீட்டுக்குள் கதவை மூடி இரண்டு சிறார்களையும் மனைவியையும் வெட்டிய நிலையில் தான் வாலை கையில் வைத்துக்கொண்டு நின்றதாகவும் அதன் போது அவரை கைது செய்ததாகவும் பொலிஸர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அவரது மனைவியான கே.நித்தியா (32 வயது) அவரது மகளான காயத்திரி (10 வயது) மற்றும் சந்தியா (08) ஆகிய இருவருமே வெட்டிய நிலையில் உயிரிழந்து கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை உப்புவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.