திருகோணமலை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண ஆளுணருடன் சந்திப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் தலைமையிலான திருகோணமலை இஸ்லாமிய சங்கம் 16.11.2016 பி.ப.12.30 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னான் டோவை கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

குறித்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் ஆளுனரின் செயலாளர் திருமதி முரளிதரன் உதவி செயலாளர் செல்வி காலிதா பேகம் இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் தேசிய தலைவர் அனஸ்,திருகோணமலை மாவட்ட தலைவர் பிரதி அதிபர் சாலி,மாவட்ட இணைப்பாளர்,மாவட்ட செயலர் நவ்சாத் உட்பட உறுப்பினர்களான ஏனைய பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டு பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன

01. ஆசிரியர் பற்றாக்குறை

02. தேசிய பாடசாலை ஆசிரியர்களின் பதவி உயர்வு

03. அண்மையில் நியமித்த கல்வியல் கல்லூரி நியமனத்தை
தேவையான இடங்களுக்கு நியமித்தல்

04. எதிர்கால பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் போது வயதெல்லையை
45 யாக உயர்த்தல்

05. கஷ்டப்பிரதேசங்களில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளை
நிவர்த்தி செய்யா அப்பிரதேசத்திலுள்ள க.பொ.தா (உ /த),(சா/த)
தகைமை உடையோரிடம் இருந்து போட்டிப்பரீட்சையின் மூலம்
ஆசிரியர் உதவியாளராக நியமித்தல்

06. முறையான ஆசிரியர் இடமாற்றம்

07. திரியாய் சந்தியில் அமைக்கப்படவுள்ள ஆசிரியர் பயிற்ச்சி நிலையத்தின்
கட்டிடத்தை தீர்மானத்தின்படி வேறு இடத்திற்கு நகர்த்தாமல் உரிய
இடத்தில் நிறுவுதல்

08.ஹஜ் யாத்திரைக்காக செல்லும் ஆசிரியர்களுக்கு உத்தியோக விடுமுறை
வழங்குதல்

09. குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலையம்

10. எதிர்காலத்தில் நியமிக்கவுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கஸ்ட மற்றும்
பின் தங்கிய பாடசாலைகளுக்கு நியமித்தல் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன

குறித்த விடங்களுக்கு பதில் அளித்த ஆளுனர் அவர்கள் ஆசிரியர் நியமனம் தொடர்பாக முற்று முழுதாக கல்வி அமைச்சிற்கே கொடுக்கப்பட்டது எனவும்

பட்டதாரிகளின் வயதெல்லை தொடர்பாக 35 வயது 40ஆக மாற்றப்பட்டுள்ளது குறித்த 40 வயதெல்லையானது இம்முறை மாத்திரமே வழக்கப்பட்டுள்ளதாக கூறிய ஆளுனர் அதற்க்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் கிழக்கு மாகாண கடந்த முற்பது வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது அதிகமான பட்டதாரிகள் நாட்டை விட்டு புலம்பெயர்ந்ததால் அவர்களால் உரிய காலத்தில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் நிலவியது மேலும் அவர்களுடைய நிலைமையை கருத்தில் கொள்ளாவிட்டால் இனிவரும் காலத்தில் பட்டதாரி முடித்த அவர்களால் வாழ் நாளில் எந்த அரச தொழிலையும் பெறமுடியாத துர்பாக்கிய சாலிகளாக மாறிவிடுவார்கள் எனவே அவர்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்

முறையான இடமாற்றம் தொடர்பாக அரசியல் வாதிகளில் சிலர் தலையீடே காரணம் அவைகள் குறைக்கப்பட்டால் சரியாகிவிடும்

திரியாய் சந்தியில் அமைக்கப்படவுள்ள ஆசிரியர் பயிற்ச்சி நிலையத்தின்
கட்டிடத்தை தீர்மானத்தின்படி வேறு இடத்திற்கு நகர்த்தாமல் உரிய இடத்தில் நிறுவவேண்டும் என கேட்டபோது

கல்வி அமைச்சின் செயலாளரால் ஆளுனருக்கு ஒப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறித்த ஆசிரியர் பயிற்ச்சி நிலையம் திரியாய் சந்தியில் இருந்து பன்குளம் பகுதியை நோக்கிய வீதிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்தில் திரியாய் சந்தியில் கொமாரன்கடவை கல்வி வலைய கட்டிடம் மற்றும் கணனி பயிற்ச்சி நிலையம் என்பன அமைக்க இருப்பதால் ஆசிரியர் பயிற்ச்சி நிலையம் பன்குள வீதிக்கு நகர்த்தப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளரின் அறிக்கையின்படி அதற்க்கு பதில் அளித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் திரியாய் சந்தியில் அமைக்க திட்டமிட்டுள்ள கொமாரன்கடவை கல்வி வலைய கட்டிடம் மற்றும் கணனி பயிற்ச்சி நிலையம் என்பன கொமாரன்கடவை பிரதேசத்திற்கு மாத்திரமே சொந்தமானது ஆனால் ஆசிரியர் பயிற்ச்சி நிலையம் என்பது மூவினங்களை சார்ந்த மக்களுக்கு மாத்திரமல்லாமல் பதவி ஸ்ரீ புரம்,புல்மோட்டை ,குச்சவெளி திரியாய் நிலாவெளி இறக்கக்கண்டி போன்ற தூரப்பிரதேச ஆசிரியர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற செயலாகும் அத்துடன் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்தை மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என மாகாண சபை உறுப்பினர் கேள்வி எழுப்ப உடனடியாக மாகாண சபை உறுப்பினர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களுக்கு நியாயங்களை கோரி கடிதம் ஒன்றை அனுப்பும்படி ஆளுனரால் அவரின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது

குச்சவெளி தனியான கல்வி வலையம் தொடர்பாக நியாமான காரணங்கள் மற்றும் கல்வி அமைச்சின் பரிந்துரையுடன் வரும்பொழுது அங்கீகரிக்கப்படும் எனவும் கூறியதுடன்

சந்திப்பை ஏற்படுத்திய மாகாண சபை உறுப்பினர் அன்வர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனருக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் தேசிய தலைவர் அனஸ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -