இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
அதாவுல்லா என்றொரு ஆளுமையினால் கொண்டுவரப்பட்ட அக்கரைப்பற்று நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய காரியாலயத்தை பிரிக்க எடுத்தமுயற்சிகளை இடைநிறுத்தியிருந்தபோதும் இரகசியமாக அம்முயற்சிகளை மீளவும் ஆரம்பித்து கல்முனை பிராந்தியகாரியாலயம் என்ற பெயரில் வாகனங்களை அனுப்புகின்றார்.
முதுகெலும்பில்லாத ஹக்கீமும் ஹரீசும் சேர்ந்து கல்முனையில் இருந்த வேலைவாய்ப்பு பணியகத்தை பறிகொடுத்தார்கள், தற்போது (UNAITA) தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையையும் மிகவிரைவில் பரிகொடுக்கப்போகின்ரார்கள் முடிந்தால் நீங்கள் வீரமுள்ள சானாக்கியமுள்ள (ஆண்பிள்ளை) அரசியல்வாதிகள் என்றால் UNAITA வை அம்பாரைக்கு கொண்டுசெல்லாமல் தடுத்து நிறுத்திப்பாருங்கள்.
அக்கரைப்பற்று தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையையின் பிராந்திய காரியாலயத்தை கல்முனை மக்கள் வேண்டுமென்றால் முழுமையாக எடுத்து கொள்ளுங்கள் எங்கள் இடங்களை ஊரின் வேறுதேவைகளுக்கு நாங்கள் பயன்படுத்துகின்றோம் அதேபோன்று ஏனைய ஒன்பதுக்கு மேற்பட்ட பிராந்திய காரியாலயங்களுக்கு கல்முனைக்கு எமது மக்கள் வருவதுபோல் இதற்கும் வந்துவிட்டு போகிறோம்.
மாறாக இக்காரியாலயத்தை பிரித்து ஊர்வாதத்தை உண்டுபண்ணி அரசியல் செய்யவரும் ஹக்கீமுக்கு இடமளிக்க வேண்டாம் என்று கல்முனை மக்களை வினயமாக வேண்டிக்கொள்கின்றோம். ஹகீம் மீண்டும் ஒரு பாடம் கற்க நினைக்கின்றார் கற்றுக்கொடுக்க எமது மக்கள் தாயாராக உள்ளனர். எனவும் தெரிவித்தார்.