சுலைமான் றாபி-
அண்மையில் நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசலுக்கான (Vehicle Parking) வாகன நிறுத்துமிடம் நிர்மாணிக்ப்பட்டிருந்தது ஏழை எழியவர்களின் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்காகவே இந்த வாகன தரிப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் தற்போது மமைக்காலம் ஆரம்பித்துள்ள படியினால் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏழைகளின் வாகன உறைவிடமாக இது காணப்பட்டாலும் வேறு தேவைகளுக்காக வந்த வசதிபடைத்தவர்களின் வாகனங்கள் மழையில் நனையக்கூடாது என்பதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் அவர்களின் வாகனங்களை தரித்து வைத்துள்ளனர்.
இதேவேளை இந்த வாகன தரிப்பிடம் யாருக்காக நிறுவப்பட்டதோ அவர்களுக்கு பிரயோசனப்படாமல் வசதி படைத்தவர்களுக்கு அடைக்கலம் வழங்கப்படும் இடமாக தோற்றமளிப்பதை நிந்தவூர் ஜும்மாப்பள்ளிவாசலும் அதன் நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் விடுவதும் இவ்வாறான செயல்களுக்கு எதிராக ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் போனதும் பள்ளிக்கு தொழுகைக்காக வரும் ஏழை, எழிய மக்களின் மனங்களில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஏழைகளின் ஹக்குகளில் அடைக்கலம் தேடும் வசதிபடைத்தவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த நிந்தவூர் ஜும்மாப்பள்ளிவாசல் நடவடிக்கைகள் எடுக்குமா??