திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பில்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (12) காலை 9.00மணி முதல் 12.30 மணிவரை தாதியர் உத்தியோகத்தரொருவர் வைத்தியரொருவரினால் நோயாளர்களுக்கு முன்னிலையில் ஏசியமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஜக்கிய தாதியர் சங்கம்.அரசாங்க தாதியர் சங்கம் ஆகிய இரு சங்கங்களைச்சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்களே பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது. திருகோணமலை பொது வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவிற்கு இரத்தம் பரிசோதனை செய்வதற்காக வைத்தியர் வழங்கியதாக ஏதும் எழுதப்படாத நிலையில் நோயாளரொருவர் பற்றுச்சீட்டொன்றை கொண்டு வந்த போது ஊசி போடும் அறையிலிருந்த தாதியர் இந்த பற்றுச்சீட்டை கொடுத்து பற்றுச்சீட்டு வழங்கிய வைத்தியரிடம் சென்று விபரத்தினை எழுதிவிட்டு வருமாறு தெரிவித்ததையடுத்தே வௌிநோயாளர் பிரிவின் வைத்திய பொறுப்பதிகாரி தாதியரை பேசியதாகவும் தெரியவருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக இரு சங்கங்களைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பணிப்பாளரை சந்திக்க சென்ற போது தன்னை தாதியர்கள் சந்திக்க தேவையில்லையென மறுத்துள்ளார்.

இதனை கண்டித்தே தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதேவேளை நோயாளர்கள் காலை முதல் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கொழும்பு சங்கங்களின் ஆலோசனையின் பேரில் திருகோணமலை சங்க உறுப்பினர்கள் பணிப்பாளர் மற்றும் ஏசிய வைத்தியர் மற்றும் வைத்திய நிபுணர்கள் அனைவரும் இனைந்து கலந்துறையாடியதையடுத்து பணி பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்ததாகவும் வைத்தியசாழலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -