இறக்காமம் புத்தர் சிலை விவகாரம் : பேச்சுவார்த்தை தோல்வி

அலுவலக செய்தியாளர்-

இறக்காமம், மானிக்கமடு பிரதேசத்தில் தீடிர் என உருவான புத்தர் சிலையின் அகற்றக்கோரி அப்பிரதேச மக்கள் கோரியிருந்த நிலையில்  இன்று (02) அம்பாறை மாவட்ட கச்சேரியில்  இது தொடர்பான கூட்டத்தின் போது பிக்குகள் தம்மால் அதனை அகற்ற முடியாது என்றும் பிக்குகள் அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து இன்று இடம்பெற்ற உயர் அதிகாரிகளின் கூட்டம் தோல்வியடைந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.


இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாணிக்கமடு கிராமமொன்றின் மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைக்கு நேற்று (03) அரசாங்க அதிபரால் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தீர்வு காணப்படவில்லை.

பௌத்த குடியிருப்புகளே இல்லாத இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது கடந்த சனிக்கிழமை அம்பாறை நகரிலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளினால் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களினாலும், தலைமைகளினாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிபரால் மாவட்ட செயலகத்தில் இந்த சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் இந்து ஆலய நிர்வாகிகளுடன் புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ், முஸ்லிம் தரப்புகள் பௌத்தர்கள் அல்லாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொருத்தமற்றது.

இதனால் எதிர்காலத்தில் பின் விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்காமம் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சிக்குரிய 19 இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு இருப்பதாக பௌத்த பிக்குகளினால் இதற்கு பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இரு தரப்பும் தங்கள் கருத்துக்களை முன் வைத்த நிலையில் இந்த விவகாரத்தை ஆராய்ந்து சுமூகமான தீர்வொன்றை காண்பதற்கு தமிழ், முஸ்லிம், பௌத்த துறவிகள் மற்றும் சிவில் அதிகாரிகள் என 15 பேர் கொண்ட குழுவொன்று இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு நாளைய தினம் கூடவிருக்கின்றது. அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.எம் மன்சூர், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.ஐ. உதுமான்லெப்பை ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -