கிழக்கு முதலமைச்சரின் யோசனைக்கு ஜனாதிபதி பாராட்டு..!



கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தளபாட பற்றாக்குறை காணப்படுவதினால் அவற்றை நிவர்த்திக்க விசேட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்

இன்று நண்பகல் 12 மணியளவில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது

இதன் போது 9 மாகாணங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் பங்கேற்றதுடன் அனைத்து முதலமைச்சர்களும் பங்கேற்ற முதல் கூட்டமாக இது அமைந்திருந்தது

அத்துடன் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கோரிக்கைக்கு இணங்க இதன் போது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுங்கும் சிறு உள் வீதிகளை அமைப்பதற்கு நிதியொதுக்குவதற்கு இதன்போது ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதுடன் கிழக்கு முதலமைச்சரின் யோசனைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி மன்றங்களூடாக முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களும் முதலமைச்சர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழேயே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன் போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அது மாத்திரமன்றி உள்ளூராட்சி மன்றங்களூடாக மேற்கொள்ளப்படும் நிதியொதுக்கீடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் அனைத்தும் முதலமைச்சர்களின் முழு அனுமதியுடனேயே முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அத்துடன் மாகாணங்களக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிதியை எதிர்வரும் மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி நிதியமைச்சருக்கு பணித்திருப்பதுடன் இம்முறை வரவு செலவுத்திட்டத்தினூடாக குறைக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கான நிதியை அதிகரிக்க வேண்டுமெனவும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது கிழக்கிலும் நாட்டிலும் தலைதூக்கியுள்ள இனவாதம் தொடர்பிலும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -