ஐக்கிய நாடுகள் மனித உரிமை தாபனத்தின் நிதியுதவின் கீழ் ESDF - SRILANKA நிறுவனமானது இம்போட்மிரர் ஊடக வலையமைப்புடன் இணைந்து மாவட்ட மட்டத்திலான நிலைமாற்று நீதிப் பொறிமுறையை ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று (04) மாலை அட்டாளைச்சேனை ஒஸ்றா மண்டபத்தில் இடம்பெற்றது
இதன்போது, நிலைமாற்று நீதிப் பொறிமுறையில் உள்ள 05 முக்கிய விடயங்கள், சட்டப்பிரமாணங்கள், பொறுப்புக் கூறும் பொறிமுறைகள் ஆகியன பற்றிய விரிவான தகவல்களை 30க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சிரேஸ்ட சட்டத்தரணி திருமதி ஸ்ரீனினால் வழங்கிவைக்கப்பட்டது.
கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.