இனவாதிகளிடமிருந்து தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லையும் முஸ்­லிம்­க­ளையும் பாது­காக்கவும் - ஜானதிபதியிடம் பௌஸி

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் உட­ன­டி­யாகத் தலை­யிட்டு நிரந்­தரத் தீர்­வொன்­றினைப் பெற்றுக் கொடுக்­கும்­ப­டியும் இன­வா­தி­களின் அச்­சு­றுத்­த­லி­லி­ருந்து தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லையும் முஸ்­லிம்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

தம்­புள்ளை புனித பூமியில் இருக்கும் பள்­ளி­வா­ச­லுக்கு மாற்றீடாக அப்­பள்ளி வாசலை வேறோர் இடத்தில் இட­மாற்றிக் கொள்­வ­தற்கு நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை ஒதுக்­கி­யுள்ள காணி வழங்­கப்­படக் கூடாது எனக் கோரியும் எதிர்­வரும் 19 ஆம் திகதி தம்­புள்­ளையில் இன­வா­தி­க­ளினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள ஆர்ப்­பாட்­டத்தை தடுத்து நிறுத்­து­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு உத்­த­ரவு வழங்­கு­மாறும் இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஜனா­தி­ப­தியைக் கோரி­யுள்ளார்.

எதிர்­வரும் 19 ஆம் திகதி பள்­ளி­வா­ச­லுக்கும் பள்­ளி­வாசல் காணிக்கும் எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள ஆர்ப்­பாட்டம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பினர் எஸ்.வை.எம். சலீம்தீன் இரா­ஜாங்க அமைச்சர் பௌஸி­யிடம் முறை­யிட்­ட­தை­ய­டுத்தே அவர் இவ்­வி­வ­கா­ரத்தை ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்ளார்.

இதே­வேளை குரு­நாகல் மாவட்­டத்தில் தெலி­யா­கொன்­னை­யிலும் நிக்­க­வெ­ரட்­டி­யிலும் இடம்­பெற்ற பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளையும் அமைச்சர் பௌஸி ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்­ள­துடன் இவ்­வா­றான தாக்­குதல் சம்­ப­வத்­துக்­கான பின்­ன­ணியை கண்­ட­றிய உளவுப் பிரி­வி­னரைப் பயன்­ப­டுத்­து­மாறும் வேண்­டி­யுள்ளார்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி அப்­ப­குதி பௌத்த குருவின் தலை­மை­யி­லான குழு­வி­னரால் தாக்­கு­த­லுக்­குட்­பட்­டது. தாக்­கு­த­லுக்கு முன்­னைய தினம் ஏப்ரல் 19 ஆம் திகதி இவ்­வா­றான தாக்­கு­த­லுக்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. எனவே ஆர்ப்­பாட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யும்­படி கோரிக்கை விடுத்தும் பொலிஸார் உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­மை­யி­னா­லேயே அடுத்த தினம் பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­ட­மை­யையும் அமைச்சர் பௌஸி ஜனா­தி­ப­திக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

இதே­வேளை தம்­புள்ளை பள்ளி விவ­கா­ரத்தில் தீர்­வொன்­றினைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவும் ஜனா­தி­ப­திக்கு இதற்கான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காகவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மேற்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -