திருகோணமலை: கடற்படையினரின் உழவு இயந்திரம் விபத்து - நால்வர் வைத்தியசாலையில்

எப்.முபாரக்-
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவில் கடற்படையினரின் உழவு இயந்திரம் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை குடைசாய்ந்ததில் 04 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தை அடுத்து உழவு இயந்திரச் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா உப்பாறுக் கடற்படை முகாமிலிருந்து திருகோணமலை தலைமையக முகாமுக்கு பயணித்துக்கொண்டிருந்தபோதே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

இவ்விபத்தில் அதே முகாமில் கடமையாற்றும் வை.ஜி.ஜி.எஸ்.பண்டார (26 வயது), ஏ.என்.எம்.பீ.சில்வா (20 வயது), ஜி.ஏ.எஸ்.உபசேன (27 வயது) மற்றும் எஸ்.எம்.ஜெயரெட்ண (27 வயது) ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -