இறக்காமம் புத்தர் சிலை விவகாரம் : சிறுபான்மை மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் செயலாகும் - ஹரீஸ்

ஹாசிப் யாஸீன்-
றக்காமம் மாணிக்கமடு பிரதேசத்திலுள்ள மாயாக்கல் மலையில் புத்தர் சிலைவைக்கப்பட்டமை அம்பாறை மாவட்டத்தில் ஒற்றுமையாக வாழும் மூவின மக்களின்ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்தெரிவித்தார்.

இவ்விடயம் சம்பந்தமாக லண்டன் நாட்டிலிருந்து பிரதி அமைச்சர் ஹரீஸ் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கையில்,

பெரும்பான்மையாக தமிழர்களும், முஸ்லிம்களும் வாழும் மாணிக்கமடு பிரதேசத்தில்திடீரென புத்தர் சிலையினை வைக்க முற்பட்டதன் விளைவாக அம்பாறை மாவட்டமக்களிடையே இன முறுகலையும், முரண்பாட்டையும் தோற்றுவிக்க சிலர்முயற்சிக்கின்றனர். இதற்கு இப்பிரதேச மக்கள் இடமளிக்கக்கூடாது. இந்நடவடிக்கைசிறுபான்மை மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் செயலாகும் இதனை வன்மையாககண்டிக்கின்றேன்.

பொலிஸாரின் தடையையும், பிரதேச மக்களின் எதிர்ப்பையும் மீறி பௌத்த குழுவினர் புத்தர்சிலையினை மாணிக்கமடு பிரதேசத்தில் வைத்தமையானது இதன் பின்னணயியில் பிரபலஅரசியல்வாதி தொடர்வுள்ளதாக அறிய முடிகிறது.

சிறுபான்மை மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்ததன் மூலம் நிம்மதி பெருமூச்சுவிடலாம் என்று எண்ணிய நிலையில் இவ்வாறு தொடராக முஸ்லிம்களின் உரிமை சார்ந்தவிடயங்களில் கை வைப்பதானது மக்கள் மத்தியில் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான இனவாத செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் கண்டுகொள்ளாமலும் உரியசட்ட நடவடிக்கை எடுக்காமல் விட்டதனால் இன்று நாட்டின் நாளாபுறமும் முஸ்லிம்களுக்குஎதிராக இனவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த இனவாத செயற்பாடுகள் தொடருமானால் மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தைசிறுபான்மை மக்கள் சிந்திக்கும் அளவுக்கு நிலைமையினை கொண்டுவந்து விடாமல்மக்களை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.

இன்று நாட்டில் இடம்பெற்று வரும் பௌத்த இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து செயற்படவேண்டிய தேவையுள்ளது. 

இந்த புத்தர் சிலை விவகாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு மாவட்டத்தின்முறுகல் நிலையினை முடிவுக்கு கொண்டு வந்து உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -