முல்லைத்தீவில் ”செமட்ட செவண” வேலைத்திட்டம் - சஜித் பிரேமதாசாவுடன் மஸ்தான்

அஷ்ரப் ஏ சமத்-
மைச்சா் சஜித் பிரேமதாச முலலைத்தீவில் 1500 இளைஞா் யுவதிகளுக்கு நிர்மாணத்துறையில் தொழில் வாய்ப்பு மற்றும் பயிற்சி . முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தொழில் அற்ற 1500 இளைஞா் யுவதிகளுக்கு கட்டிட நிர்மாணத்துறை சாா்ந்த மரவேலை, மற்றும் மேசன் தொழில் முய்ற்சியான ”சில்பி சவிய” திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. 

இத் திட்டம் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள ” இக்டாட்” அதிகார சபையின் கீழ் நாடு முழுவதிலும் நிர்மாணத்துறையில் 60ஆயிரம் பேரினை இத்துறையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. . இத்துறை சாா்ந்த பயிற்சியாளா்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ருபா கொடுப்பணவுகளும் வழங்கப்பட்டு 3 மாத கால பயிற்சியின் பின்னா் 5 ஆயிரம் ருபா பெறுமதியான உபகரணங்கள் கொண்ட பொதி, மற்றும் 2 ஆயிரம ருபாவுக்கான சீருடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னா் ” இக்டாட் ”நிறுவனத்தின் கீழ் என்.வி.கியு தரம் 111 சான்றிதழ் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு கட்டிட நிர்மாணத் தொழிலாளாராக பதிவுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது. 

மேற்படி திட்டம் நேற்று (5) முல்லைத்தீவில் அமைச்சா் சஜித் பிரேமதாச தலைமையில் இத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெரிபு செய்யப்பட்ட 1500 இளைஞா்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.. அத்துடன் 100 குடுமபங்களுக்கு தமது வீடுகளை மீள நிர்மாணித்துக் கொள்ளவென சீமெந்து பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் எம். மஸ்தான், குழுக்களின் பிரதித் தலைவா் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முல்லைத்தீவு அரசியல் பிரநிதிகளும் கலந்து கொண்டனா். 

இங்கு உரையாற்றிய சஜித் பிரேமதாச;

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2017 ல் 10 கம்உதாவ வீடமைப்புக் கிராமங்கள் ஆரம்பிக்கப்படும். 2017 ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து ஒக்டோபா் 5திகதியுடன் ஜக்கிய நாடுகளின் ஹெபிட்டாட் 30 வருடங்களை புர்த்தி செய்வதன் நிமித்தம் இத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும். ஒவ்வொரு குடுமபத்திற்கும் 10 பேர்ச் காணி இலவசமாக வழங்கப்பட்டு ஒரு வீடமைப்புக் கிராமத்தில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்படும். கடந்த 30 வருட கால யுத்த்தினால் முல்லைத்தீவு மாவட்டம் மிகவும் படு மேசமாக பாதிக்கப்பட்டதொரு பிரதேசமாகும். யுத்தம் ஓய்வடைந்து சமாதாண சூழ்நிலையில் இந்த பிரதேசத்தில் எவ்வித அபிவிருத்தியும் காணப்பட வில்லை. 

வடக்கில் உள்ள சில கடின பேக்குடையவா்கள் வட கிழக்கு இணைக்கப்படல் வேண்டும் எனச் சொல்கின்றனா். அவா்கள் மீண்டும் ஒரு யுத்ததிற்கு வித்திடுகின்றனா். அவ்வாறு மீளவும் ஒரு யுத்தம் ஏற்பட்டால் இந்த நாடு மீண்டும் ஒரு இருள் சூழ்ந்த நிலைக்கே தள்ளப்படும். அப்பாவியான பொது மக்களே மீள பாதிக்கப்படுவாா்கள். தெற்கிழும் இவ்வாறான கடின போக்குடையவா்கள் உள்ளனா். இந்த நாட்டில் பிறந்த எந்த ஒரு பிரஜையாகினும் அவா்களுக்கு இந் நாட்டில் எங்கு செல்லவோ வாழவோ அவா்களது மத வழிபாட்டினை மேற்கொள்ளவோ உரிமை உள்ளது. எனது தந்தையான ஆர். பிரேமதாச ஒரு சிறந்த பௌத்தன் அவா் முதலில் பௌத்த மதத்தினை ஆசிரிவாதம் பெற்று , ஏனைய மதங்களான ஹிந்து, இஸ்லாம், கிரிஸ்த்துவ மதங்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்றாா். அதன் பின் அவரது கருத்திட்டங்களை நாடெங்கிலும் முன்னெடுத்தாா். 

அவரது அடிச்சுவரையே நானும் பின் தொடா்ந்து எனது அரசியலையும் முன்னெடுத்துச் செல்கின்றேன். இந்த நாட்டில் பிறந்த சகல இனங்களும் ஒன்றினைந்து ஜக்கிய இலங்கையை உருவாக்கி ஒரு நாடு நாம் அணைவரினது ஒரு தாய் பெற்ற மக்கள் போன்று வாழ வேண்டும். அதனையே நான் முன்னெடுக்கின்றேன். என அங்கு உரையாற்றிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அங்கு உரையாற்றினாா்

குறித்த நிகழ்வில் அவர் கே.காதர் மஸ்தான் உரையாற்றும்போது, 

முல்லைத்தீவு மாவட்டம் என்பது யுத்தாத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய வாழ்வாதாரத்தை கொண்டவர்கள் வாழும் ஒரு பகுதியாகும். இங்குள்ளவர்கள் தங்களது உயிர் ,உடைமைகள் என்பவற்றை இழந்து இப்பொழுது என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கதியாகி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு உதவித்திட்டங்கள் வந்தடைவது மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.

எமது இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்ஹ தலைமையிலான ஆட்சியின் கீழ் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்கள் நாட்டின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச வீடைப்புத்துறையில் பல்வேறு அபிவிருத்திகளை செய்தார் என்றாலும் அவரது மரணத்திற்கு பின்னர் அவை தேங்கிக்காணப்பட்டன ஆனால் இப்பொழுது தந்தையின் அதே செயற்பாடுகளை அவரது மகன் அமைச்சர் சஜித் பிரேமதாச முன்னெடுத்து செல்கிறார் என்பது பாராட்டக்கூடிய ஒன்றாகும்.

அந்த வகையில் அமைச்சர் சஜித் பிரேமதாச யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உங்களிடமுள்ள வீடமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் , அதேபோல இங்கு படித்த எத்தனையோ படித்த இளைஞர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் என்பவற்றையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும் என அவர் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -