ரிம்சி ஜலீல்-
பல்லாயிரக் கணக்கானோரின் வரவேற்ப்புடன் புத்தெழுச்சியுடன் புத்தளம்ந கரில் 11ம் திகதி நேற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும்பொ துக்கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம் தலமையில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
புத்தளத்தில் வெற்றிகரமாக நிறைவுபெற்ற பல நிகழ்வுகளைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்ட முன்னாள்பி ரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ் அவர்கள் ஏற்பாடு செய்த மாபெரும்பொ துக்கூட்டம் ஆரம்பமானது
இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் உறையாற்றும் போது முஸ்லிம் காங்கிரஸை உருவாக்குவதற்க்கு ஒரு பாமர கூலித் தொழிலாளியின் மகனான மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் நாம் நீண்ட பயணத்தை மேற்கொண்டோம்.
ஆனால் இன்று அஷ்ரபின் பெயரை வைத்து பலர் முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் திட்டம் போடுகின்றார்கள் வன்னி மகானை நாமும் எமது கட்சியும்
உருவாக்கினோம் என்பதை நிணைத்து பெருமைப் படுகின்றோம் ஆனால் அவர்களின் நடிப்பும் நாடகமும் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உருவாக்கிய கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீரியத்தை பாதிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஆனால் சிலர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களைப் பற்றியும் அவர்களின் சானக்யத்தையும் பற்றியும் பேசுகின்ற ரிஷாத் அஷ்ரபுடன் கூட இருந்து கட்சிநடத்தியது போன்று கன்டதையும் பேசுகின்றார் இவைகள் அனைத்தும் மாபெரும் நடிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை.
தன்னை அரசியலுக்குக் கொண்டுவந்த நூர்தீன் மசூர் அவர்களுக்குச் செய்த அனியாயத்தை போன்று அவர் யாருக்கும் செய்ததில்லை தான் ஆடும் நாடகமும் மயில் ஆடுவதைப் போன்றுதான் உள்ளது மயிலால் மிக நீண்ட தூரம் பறக்க முடியாது என்பது அனைவரும் தெறிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ் அவர்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டமையானது இன்று மீண்டும் புத்தள மண் பெருமைப் படுகின்றது நாம் தனித்துவமான கட்சியாக இருந்து புத்தளத்திற்க்கும் புத்தள மக்களுக்கும் மிகபெரிய சேவையை ஆற்ற உள்ளோம். இப் பொதுக்கூட்டத்தில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச். நியாஸ், எச்.எம். றயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாருக் உட்பட அரசியல்பிரமுகர்கள், கட்சியின்உ யர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்த்தர்கள், புத்தளம் நகர முக்கிய பிரமுகர்கள், பல்லாயிரக்கணக்கான போராளிகள் பொதுமக்கள் என பலரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.