யாழ் மாணவர்கள் கொலை – ஜனாதிபதி நஷ்டஈடு வழங்க நடவடிக்கை

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், பிரதான பேராசிரியர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, அண்மையில் அப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில், பிரேதப் பரிசோதனை அறிக்கையை விரைவில் தயாரிக்க சட்டமா அதிபரால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதற்கு இணங்க, அதனை பெற்றுக் கொண்டு குறித்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -