அபு அலா -
சுடர் ஒளி பத்திரிகையின் 15 வது ஆண்டு நிறைவையொட்டி வாசிப்பு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று (22) செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட ஒலுவில் பிரதேச அல் மதீனா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சுடர் ஒளி பத்திரிகையின் மீனோடைக்கட்டு நிருபர் பைஷல் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆயுர்வேத சிற்றூழியர் ஒன்றியத்தின் உப தலைவர் மருந்தாளர் ஏ.எல்.மனார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் கவிஞர் பாலமுனை பாறூக், எழுகவி ஜெலீல், ஆசிரியர் அன்வர் நௌஷாட் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சுடர் ஒளி பத்திரிகையின் 15 வது ஆண்டு நிறைவையொட்டிய வாசிப்பு விழிப்புணர்வு செயற்றிட்ட பதாகைகள், ஒளி அரசி புத்தகங்கள் மற்றும் தரம் இரண்டு மாணவர்களுக்கான செயல் நூல் புத்தகங்கள் போன்றவற்றை பாடசாலையின் அதிபர் கே.எல்.அமீர் மற்றும் ஆசிரியர்களான எஸ்.சகுபானா, எம்.ஏ.மஸ்றுபா ஆகியோர்களிடம் கையளித்து வைத்தனர்.