தூங்குகிறாயா?
உன் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைக்க
அரசியலமைப்புச் சதி அரங்கேறுவதை அறியாமல்
தூங்குகிறாயா ?
இன்று வரை உனை ஆள்வது ஒரு ஆட்சி
இனி உனை ஆழப்போவது எட்டாட்சி
இன்று வரை இலங்கை ஒரு நாடு
எதிர்கால இலங்கைக்குள் எட்டு நாடு.
ஓர் அரசு பிழைத்த போது
நீ பட்டபாடு
ஒற்றுமையாய் முறியடித்தோம்
தப்பியது நாடு.
நீ போட்ட வோட்டுக்கு கைமாறு
எட்டு நாட்டில் உனக்கு வாழ்க்கை கண்ணீரு
அதன் பிறகு அடிமை என்று உனக்கு பேரு
உதவாக்கரைத் தலைவர்கள் நமக்கு வேறு.
அதிகாரப் பட்டியல் தயாராகி விட்டது
உனக்கென்று அடிமைச் சாசனம் முடிவாகி விட்டது.
அறியாமை இருளில் நீ மூழ்கி விட்டது
ஆட்சியாளர்க்கு பெரிய வாசியாகி விட்டது.
முஸ்லிம் இளைஞனே தூங்குகிறாயா?
எல்லாம் முடிந்தது எழுந்திடு அடிமையே!
என்ற அவர் அறைகூவல் உன்காதில் ஒலிக்கும்வரை
உன் உறக்கம் ஒயாதா?
எழுந்திடு
முஸ்லிம் இளைஞனே, எழுந்திடு
தூங்கியது போதும், இனியும் துயில் கொள்ள நேரமில்லை .
உன் தலைவிதியை மாற்றி எழதும் வரை
தூங்கிவிட்டு அதன் பின் துயிலெழுந்தும் பலன் இல்லை.
எழுந்திடு, முஸ்லிம் இளைஞனே எழுந்திடு
அறிவு கெட்ட மாந்தர் ஆயிரத்தைச்
சொன்னாலும்
உன் உரிமைக்காக்க உனக்கென்று யாரிருக்கார்
எழுந்திடு , தூங்கியது போதும் எழுந்திடு.
வை. எல். எஸ் . ஹமீட்