தீ மூட்டியவர்களுக்கு..!

எமது பிராத்தனைகள்
எனது இறைவனின் தீர்ப்பு

இது என்ன மாயச்சக்கரம்
லூத் நபியின் கூட்டத்தார் ஆது மகன சத்தாது
பிர்அவ்னின் வழித் தோன்றல்

விஞ்ஞானம் தோற்றுவிடும்
மெய்ஞான வித்தகனின் மாய ஜாலம்

பாலகன் அய்லானை மூழ்கடித்த கடல்
டுவின் டவர் உடைப்பின் சிதைவுகளில் 
சிக்குண்ட அமெரிக்கன்

அக்ஸா வில் ஒலித்திடாத இறை ஓசை
சொந்த நிலத்தில் அகதியான பாலஸ்தீன்
ஹரம் சரிபை நோக்கி பாய்ந்த ஏவுகணை
மசகுக்காய் பலி கொல்லப்பட்ட சதாம், கடாபி

இவைதானா!!! 
எம்முள் எரிந்த காட்டுத்தீ.

ஹிட்லர் நீ உனது வார்த்தையை மெய்பித்தாய்
எனதிறைவன் அவன் வாக்கை நிறைவு செய்தான்.

எனது தாய்மையை நீ சுடுகலன் கொண்டு
சிதைத்த போதும்
வேடிக்கை கொண்ட எம்மவர்கள்
கபளீகரம் செய்து எம்மை துரத்தியடித்த போது
பேசாமடந்தையான மன்னர்கள்
இனி அச்சம் கொள்ளட்டும்..

படை பட்டாளம் கொண்டு பிர்அவ்ன் வஞ்சித்தாலும்
பிளவுபட்ட நைலால் 
மூஸாவின் சந்ததியை உயிர்பித்த ரப்பு
சதிகாரர்களை மிகைத்த சதிகாரன்..
அஸ்மி ஏ கபூர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -