கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் வேண்டுகோளுக்கமைவாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபில் நசீர் அஹமட் அவர்களினூடாக கிழக்கு மாகாண சபை நிதி ஒதிக்கீட்டிலிருந்து நாற்பது இலட்சம் ரூபா செலவில் பூநொச்சிமுனை இக்றா பாடசாலையில் ஆசிரியர் விடுதி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபில் Z.A. நசீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறூக் அவரக்ளும ஏனைய அததிகிளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் M,T,A. நிசாம், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் M,I. சேகு அலி மறறும நகர திட்டமிடல் நீர் சழங்கல் அமைச்சின் இணைப்பாளர் U.L.M.N. முபீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்...
கிழக்கு மாகாண சபை மூலம் பாடசாலைகளுக்கான பௌதீக வளங்களை வழங்குவதன் மாத்திரமின்றி பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறைகள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான அனைத்து விடயங்களுக்குமான தீர்வுகளை முன்னெடுப்பதனூடாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
ஐந்து வருட கிழக்கு மாகாண சபையினுடைய ஆட்சிக்காலத்தின் முந்தைய இரண்டரை வருடங்களுக்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருந்த போதிலும் அவர் முஸ்லிம் சமூகத்திற்கோ ஏனைய சமூகங்களுக்கோ குறிப்பிடும்படியாக எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் தற்போது உள்ள முதலமைச்சர் அவர்கள் குறுகிய காலப்பகுதிக்குள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார். கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் இவ்வாண்டில் கல்விக்காக மாத்திரம் 7500 மில்லியன் ரூபாய்களை பெற்றுக்கொடுத்திருக்கின்றார்.
தற்போது இப்பாடசாலையில் முடிவுருத்தப்படாத நிலையில் காணப்படும் கட்டடத்தினை பூரணப்படுத்தி தருமாறு கேட்டபோது எதிர்வரும் வருட நிதியில் அக்கட்டடத்தினை முற்றுமுழுதாக பூரனப்படுத்துவதற்குரிய நிதியினை ஒதுக்கி வழங்குவதாக முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதியளித்திருக்கின்றார். மேலும் இப்பாடசாலையில் மழை காலங்களில் வெள்ளநீர் தேங்கி காணப்படுகின்ற பிரச்சினையினையும் விரைவில் நிவர்த்தி செய்து தருவதற்குரிய முன்மொழிவுகளையும் கௌரவ முதலமைச்சர் அவர்களிடம் வழங்கியுள்ளோம். எனவே அதற்கான தீர்வுகளும் விரைவில் மேற்கொள்ளப்படும்.
ஆகவே கல்வி மற்றும் ஏனைய அனைத்து அபிவிருத்திகளையும் மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதனூடாக சிறந்த மாகாணமாக கிழக்கு மாகாணத்தினை மாற்றியமைக்க அர்பணிப்போடு செயற்படுவோம் என தெரிவித்தார்.