அபு அலா -
ஏ.ஆர்.அப்துல் காதரின் “மருதாபுரி” சரித்திர நாவல் வெளியீட்டு விழா நேற்று மாலை (19) மருதமுனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மருதாபுரியின் நாவல் வெளியீட்டை ஆரம்பித்து வைக்கும் முகமாக நூலின் முதல் பிரதியை நூலாசிரியர் ஏ.ஆர்.அப்துல் காதர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீருக்கு வழங்கி வைத்தார்.
ஏனைய பிரதிகளை பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம் உள்ளி்ட்ட பலர் கலந்துகொண்டனர்.