திருகோணமலை மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது - லாஹிர்

எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியையும் மாவட்டத்தின் பிரதி நிதித்துவத்தையும் யாராலும் எவர் நினைத்தாலும் குறைத்துக்கொள்ள முடியாது என திருகோணமலையின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.

திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(6) மாலை 3.00மணியளவில் திருகோணமலை ஜமாலியா பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாலர்களுடனான சந்திதிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனைத் தெரிவித்தார். 

 அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே:

எதிர் வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றினை நாம் சந்திக்கவுள்ளோம் இதற்காக வேண்டி ஒவ்வொரு கட்சி சார்ந்தவர்களும் மக்களிடம் தேவையற்ற வாக்குறுதிகளையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்,வாக்குறுதிகளும் பேச்சுகளும் மட்டுமே தவிர மக்களுக்கு பிரயோசனமான எந்த நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்படவில்லை.திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்திக்கும் மற்றும் சேவைகள் என்றாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே மேற்கொள்ள வேண்டும். தற்போது இம்மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது கந்தளாயில் 21மில்லியன் ரூபாய் செலவில் காபெட் வீதியும்,மூதூர் தக்வா நகரில் 15 மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்திப் பணிகளும்,மூதூர் துறைமுக பகுதிகள் 35 இலட்சம் ரூபாவிலும் அபிவிருத்திகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

முஸ்லிம்களின் அபிலாசைகளையும் திட்டங்களையும் பூர்த்தி செய்கின்ற ஒரு கட்சியென்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் தற்போது கட்சி சிறந்த தலைமைத்துவத்துடன் முன்னோக்கிய பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றது அனைவரும் வெற்றியை நோக்கி ஒன்று திரள வேண்டும்.

 நாட்டில் முஸ்லிம் மக்களுக்கான வேதனைகளும் துன்புறுத்தல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.அதிலும் மியன்மாரில் நடைபெறுகின்ற முஸ்லிம் மக்களுக்கான அக்கிரமங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டே இருக்கின்றது இது நிறுத்தப்பட வேண்டும் அந்நாட்டு அரசு இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -