உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஜனவரி மாத இறுதியில் அரசாங்கம் அறிவிக்க உள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் தினம் தொடர்பில் ஜனவரி மாத இறுதியில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்றை விடுக்க உள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தேர்தல்கள் நடத்துவது குறித்து அரசாங்கம் கூட்டணி கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது, துரித கதியில் தேர்தல் நடத்துவது ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும் என கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.