கம்பஹா மாவட்டம், கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்துகான இரண்டு மாடிக் கட்டிட திறப்பு விழா நேற்று (28) நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.
இந்த கட்டிடம் குவைட் நாட்டின் அனுசரனையிலும் டாக்டர் சைகா யுசப் அல் கதாமி மற்றும் ஸாத் அல் அன்சாரி ஆகியோரின் நன்கொடையிலும், கஹடோவிட அல் ஹிமா இஸ்லாமிய நிருவனத்தின் செயலாளர் எம்.ஏ.ஏ. நூருல்லா (நளீமி)யின் மேற்பார்வையிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் இஸ்மத் பாத்திமா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.