எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ள மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்தான சட்டத்தன்மையை மீளாய்வு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
சட்டமா அதிபருக்கு கடிதமொன்றை இன்றையதினம் அனுப்பிவைத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்தக்கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
அதாவது தற்போது எல்லை நிர்ணய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு எல்லை நிர்ணய செயற்பாடுகள் முடிவடைந்துள்ள மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களை நடத்துவதற்கான சட்டத்தன்மையை மீளாய்வு செய்யுமாறு சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.