முஸ்லிம்கள் தொடர்பில் இனவாதக் கருத்துக்களை வெளியிடத் தொடங்கியிருக்கும் சிங்கள இளைஞர் டான் பிரியசாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் வைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடியதன் பின்னர், அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தெமட்டகொட சமிந்த எனப்படும் பிரபல போதைமருந்து கடத்தல் மற்றும் பாதாள உலகக்கும்பல் தலைவனின் முக்கிய சகாவான டான் பிரியசாத் தற்போதைக்கு கொழும்பு மாவட்டத்தில் செயற்படும் முக்கிய போதைப் பொருள் வர்த்தகர்களில் முன்னணியில் உள்ளார்.
சிறிது காலத்துக்கு முன்னர் தேவாலய பூசாரியாக செயற்பட்டிருந்த அவர், அதனைப் பயன்படுத்தி பல்வேறு பெண்களின் வாழ்வில் விளையாடியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் ஆதாரங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைத்துக் கொள்ளவும், சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோ அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் டான் பிரியசாத் அண்மையில் சிங்கலே மற்றும் பொதுபல சேனா அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டிருந்தார். அத்துடன் கொழும்பு மாவட்ட சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர் ஒருவரின் ஆதரவையும் பெற்றுக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தள காணொளிகள் ஊடாக டான் பிரியசாத், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றார்.
இது தொடரர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று நாடாளுமன்றத்தில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடியுள்ளதுடன் நிலமைகளையும், இதில் உள்ள பாரதூரமான விடயங்களையும் நேரடியாக அவரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்களின் வாதத்தில் இருந்த நியாத்தை உணர்ந்துகொண்ட பொலிஸ் மாஅதிபர் உடனடியாக குறித்த நபரை கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளதாக நம்பகரமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியும் எமது இம்போட் மிரர் செய்திப்பிரிவுக்கு கைது செய்ய உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியும் எமது இம்போட் மிரர் செய்திப்பிரிவுக்கு கைது செய்ய உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.