அமைச்சர் திகாம்பரத்தின் பெயர் விளம்பர பலகை சேதம்

க.கிஷாந்தன்-

ட்டன் காவற்த்துறைக்குட்பட்ட அட்டன் மல்லியப்பு பகுதியில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரின் பெயர்விளம்பர பலகை இரண்டு இனந்தெரியாதவர்களால் 06.11.2016 அன்று இரவு கிழிக்கப்பட்டுள்ளதாக நகரத்திற்கு பொறுப்பான அட்டன் காவற்த்துறையினருக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.

இவ்வாறு கிழிக்கப்பட்ட விளம்பர பலகையில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் மற்றும் எம்.உதயகுமார் அவர்களினதும் உருவப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

எனவே இது தொடர்பில் விஷமிகளை கண்டறியும் நடவடிக்கையை பொலிஸார் கவனம் செலுத்தப்பட வேண்டும் மத்திய மாகாண சபை உறுப்பி

னர் சோ.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -