அஷ்ரப் ஏ சமத்-
உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சா் பைசா் முஸ்தாபாவில் தலைமையில் அமைச்சரவை உபகுழு மற்றும் உள்ளுராட்சி சபைகள் தோ்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக கடந்த வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. இந் சந்திப்பில் இக்குழுவின் உப அமைச்சரவை அங்கத்தவா்களான அமைச்சா்கள் ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன், தோ்தல் ஆணையாளா் சுதந்த தேசப்பிரிய மற்றும் அமைச்சின் செயலாளா் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இச் சந்திப்பின் போது எதிா்காலத்தில் உள்ளுராட்சி சபைகள் எல்லை மற்றும் தோ்தல ்முறைமை பற்றி கலந்துரையாடப்பட்டது. இச் சட்டம் மிகவிரைவில் அமைச்சரவைக்கு சமா்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா்.