மழை வெள்ளத்தில் மிதக்கும் யாழ் பொம்மைவெளி கிராமம்..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம முஸ்லீம் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இப்பிரதேசத்தில் 40 குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்கள் வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே முக்கிய காரணம் என யாழ் பொம்மைவெளி அபூபக்கர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான் குறிப்பிட்டார்.

மேலும் வெள்ள நீர் பாதிப்பிற்குள்ளான மக்களின் நிலைமைகளை கிராம சேவகர்கள் பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டதாக அவர் கூறினார்.

இப்பிரதேசமானது ஒவ்வொரு வருடமும் மழையினாலும் அதனால் ஏற்படும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சில வேளை இம்மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்படுகிறது. இம்மக்களிற்கு நிம்மதியாக இருக்க ஒழுங்கான வீடமைப்பு வசதி இல்லை.ஒழுங்கான வீதி கிடையாது மின் சார வசதி இல்லை நீர் வடிந்தோட ஒழுங்கான வடிகால்கள் இல்லை. சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல கஸ்டப்படுகின்றனர்.தொழில் செய்வது சிரமமாக உள்ளது இது தான் அம்மக்களின் நிலையாக உள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்றாட உணவுகளை சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர். 

தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக காக்கை தீவு நாவாந்துறையை இணைக்கும் பொம்மைவெளி பிரதேசத்தினூடாக செல்லும் கடற்கரையோர வீதியே இவ்வாறு கான் அமைத்து சீர் செய்யப்பட்டு வருகின்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -