பொது தகவல் தொடர்பாடல் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் தற்போதைய நிலையில் சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறாவிட்டால் 1911 அவசர தொலைபேசிக்கு தொடர்புக்கொண்ட தெரிவிக்கமுடியும்.
அத்துடன் பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் திணைக்களத்திலும் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது தகவல் தொடர்பாடல் பரீட்சை எதிர்வரும் 19-ம் திகதி சனிக்கிழமை இடம்பெறுவுள்ளது.
குறித்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 834 பேர் தோற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.