கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் சில அமைச்சின் செயற்பாடுகளில் அதிருப்தி காணப்படுவதாலும் கிழக்கு மாகாண சபையில் எந்த வேலைகளும் திருப்தியில்லாமல் இருப்பதாலும் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் முழுமையாக எதிர்க்கவுள்ளேன் எனவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு இன்று (11) இடம்பெற்ற போது உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் எவ்வித செயற்பாடுகளும் சீராக இடம்பெறவில்லை எனவும் அடுத்த சபையில் நான் எதிர்க்கட்சிப் பக்கம் நான் சார்ந்த கட்சியின் தலைவரின் ஆசியுடன் மாறி இருக்க பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்தார்.