அனுமதியற்ற சிலை கட்டுமாணத்தை உடன் இடைநிறுத்துமாறு இம்ரான் மஹ்ரூப் கடிதம்.

கிண்ணியாப் பாலத்துக்கு அருகில் முன்னர் மிதவைப் பாதை இறங்குதுறை இருந்த இடத்தில் புதிதாக இடம்பெற்றுவரும் அனுமதி பெறப்படாத சிலை நிர்மாணப் பணியை உடன் இடைநிறுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

திருகோணமலை அரசாங்க அதிபர் திருகோணமலை பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் உட்பட பலருக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இப்பகுதியில் அனுமதிப் பெறப்படாத நிர்மாணப் பணி ஒன்று இடம்பெற்று வருவது குறித்து பலரும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்தப் பகுதி வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக்குட்பட்டது. கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கட்டுமாணம் தொடர்பாக பின்வரும் எந்த அனுமதியும் பெறப்படவில்லை எனத்தெரிய வருகின்றது.

1. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி பெறப்படவில்லை.

2. கரையோரம் பேணல் திணைக்களத்தின் அனுமதிபெறப்படவில்லை.

3. பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை.

4. பிரதேச ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்படவில்லை.

நல்லாட்சி நடைபெறும் இக்காலத்தில் இப்படி அனுமதிபெறப்படாது பகிரங்கமாக இடம்பெறும் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த அதிகாரிகள் எவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காததையிட்டு நான் மிகவும் கலையடைகின்றேன்.

எனவே நமது நாட்டின் சட்ட திட்டங்களைப் பேணி நல்லாட்சியை உறுதிப் படுத்தும் பொருட்டு இந்த அனுமதியற்ற நிர்மாணப்பணியை உடன் இடைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என இக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -