எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை நகரை விட்டு நைட்டா இடமாற்றப்பட இருந்த முயற்சி முறியடிப்பு நைட்டா நிறுவனத்திற்கு தனியான காணி அனுமதிப் பத்திரமும் பிரதி அமைச்சர் ஹரிஸின் முயற்சியால் உடனடியாக வழங்கி வைப்பு- ஹரீஸ் அதிரடி
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக நைட்டா நிறுவனம் அம்பாரைக்கு இடம்மாற்றப்படுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்களினால் உடனடியாக முறியடிக்கப்பட்டள்ளது.அல்ஹம்துலில்லாஹ் ஏற்கனவே கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக (2016/11/10) கல்முனை பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் MH.முஹம்மட் கனி அவர்களினால் உத்தியோகபூர்வமாக நைட்டா நிறுவனத்திற்கான காணி உத்தரவு பத்திரத்தினை நைட்டா நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் A.மசூர் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அவர்களின் இணைப்பு செயலாளர்களானKM.தெளபீக்,நெளபர் A பாவா ஆகியோரும் மற்றும் பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.