ஏ.எல்.எம்.ஷினாஸ்-
இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியம், கனேடிய உயஸ்தானிகராலயம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்களது சங்கமத்தினால், இலங்கையின் பிரதேச அரசியலில் பெண்களின் பங்களிப்பை 25 சதவீதமாக அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் விளக்கமளிக்கும் செயமலர்வு காத்தான்குடி அல்-மனார் வளநிலையத்தின் மண்டபத்தில் (29.10.2016) நடைபெற்றது.
இதில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்தி குணசேகர, லண்டன் ஹறைவ் கவுன்சில் உறுப்பினர் கைறுல் கரீமா மரைக்கார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் வளவாளராக கலந்து கொண்டு உள்ளூராட்சி மன்றங்களின் முறைமைகள் தொடர்பில் விரிவான விளக்கமளித்தார்.