மோடியும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியும் செய்த வேலை...

வ்வளவு பரப்பான ஒரு நாளை சமீபத்தில் இந்தியா பார்த்தது இல்லை. பதற்றமும், குழப்பமும் இந்தியா முழுவதும் காணப்படுகிறது.காரணம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதுதான். இது ஒருபக்கம் இருக்க அமெரிக்க, அதிபர் தேர்தல் முற்றிலும் தலைகீழாக மாறியிருக்கிறது. ஒருபக்கம் மோடி, இன்னொரு பக்கம் ட்ரம்ப். இருவரும் சேர்ந்து இந்தியச் சந்தையையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டனர்.

அமெரிக்க தேர்தலில் டிரம்ப், ஹிலரியை விட கூடுதலான இடங்களை வென்று இருக்கிறார். எல்லோரும் ஹிலரிதான் அதிபராக வருவார் என்றே எதிர்பார்த்தார்கள். இப்படி தலைகீழாய் மாறிய அமெரிக்க தேர்தல் முடிவுகளும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்திய அரசின் அதிரடி முடிவாலும் சந்தை இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 5 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தைகள். தற்போது 3.5 சதவிகித அளவில் குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் குறுகிய காலத்துக்கு லிக்விடிட்டி பாதிக்கப்படும் என்பதே சந்தை கடுமையாக இறங்கியதற்கு முக்கியக் காரணம்.

ஆனால் இந்த இறக்கம் தற்காலிகமானதுதான் என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள்.

பெரும்பாலும் அனைத்து பங்குகளுமே இறக்கத்தில் உள்ளன. முக்கியமாக ரியல் எஸ்டேட் அதல பாதாளத்தில் விழுந்து இருக்கிறது. ஏறக்குறைய 20 சதவிகிதக்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. டிரம்ப்புக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லாததால் அவர் எத்தகைய அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கிறார் என்பது சந்தேகம். அவர் பேசுவதைப் பார்த்தால் அமெரிக்கர்களை மட்டும்தான் வளர்ப்பார், பிற நாட்டினரை நசுக்கி விடுவார் என்பது போன்ற பிம்பம் நிலவுகிறது.

அவரது அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் வர்த்கக் கொள்கைகள் எந்த வகையில் உலக நாடுகளை பாதிக்க இருக்கிறது என்பது தெரியாத நிலை நிலவுகிறது. இந்தியாவைப் பொருத்தமட்டில், ஐ,டி மற்றும் ஃபார்மா துறைகள் பெருமளவு பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கறுப்பு பணத்தை கட்டுக்குள் கொண்டுவர, அரசு ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துள்ளது.

உண்மையிலேயே இது கறுப்புப் பணத்தை ஒழித்து விடுமா என்பது ஒருபக்கம் சந்தேகத்துக்குரியதாக இருந்தாலும், தற்போது பெரும் நெருக்கடியை, பதற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் நீண்டகாலத்தில் பயன் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் குறிப்பிட்ட துறைகள் இதனால் உடனடி விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

சந்தை இறக்கத்தில் உள்ள நிலையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளைப் பெருமளவில் வாங்கி முதலீடு செய்து வந்தாலும், நிலையற்ற தன்மை உருவாகி உள்ளதால் அந்நிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -