நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமூகத்திற்கெதிரான பிரச்சனையைத் தீர்க்க முன்வாருங்கள்- வாலுகள் அமைதி

நாட்டில் இன்று சிறுபான்மைச் சமூகத்துக்கு பெரும் சவாலான பிரச்சனை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறன. அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறதா..? அல்லது மெளனமாக இருக்கிறதா..? என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்களின் வாலுகளும் அவதூறு சொல்வதும் அதனை நினைப்பது போன்று ஊடகங்களுக்கும் தங்களின் பேஸ்புக்களிலும் எழுதுவதனையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இன்று முஸ்லிம் என்ற பெயருடன் வந்திருக்கும் ஊடகங்களும் ஏனைய ஊடகங்களும் கேவலமான ஊடக வழிமுறைக்கும், அநியாயத்துக்கும், பொய் பித்தலாட்டங்களுக்கும் துணை நிக்கிறீர்கள் இது பாவங்களில் பெரும்பாவமாக உங்களை வந்தடையும் முன்னர் நீங்களே நிறுத்துங்கள்.

தடியெடுத்தவன் எல்லாம் இன்று வேட்டைக்காறனாக வலம்வருகிறான். யாரோ அரசியல் செய்யவும் யார் யாரோ சிம்மாசனத்தில் செளகரியங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது... கேவலம் சலுகைகள் எனும் எலும்புத் துண்டுக்காக தன் சமூகத்தின் மானத்தைக் கப்பலேற்ற சில்லறைத்தனமான சிலர் முன்வந்து சமூகத்தின் பெயரையே நாசம் செய்து கொண்டிருக்கின்றனர். அதற்காக ஊடகங்கள் வழிகொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பன கவலையளிக்கின்றது.
 எனவே அப்படியான அவதூறுகள் இந்த நாட்களில் தேவையா...? நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று இவர்களுக்கு ஏதேனும் புரிகிறதா...?

காலை எழும்பினால் பொய்யும் பித்தலாட்டங்களும், யாரைச் சாடலாம், யாருக்கு ஏசலாம் பேஸ்புக்கில் என்ன போடலாம் என்ற சிந்தனையில் இருக்கும் நபர்களே இன்று அதிகரித்து விட்டார்கள்.
 எனவே அனைவரும் ஒற்றுமையுடன் விழித்து எழுங்கள் தங்களின் சமூகத்துக்கு எதிராக எழுந்துள்ள பிரச்சனைகளை முறியடிக்க ஒற்றுமைப் பட்டு முன்வாருங்கள் என்று அனைவரையும் அன்பாகவும் பணிவாகவும் கேட்டுக் கொள்கிறேன்.

எஸ்.எல்.முனாஸ் அட்டாளைச்சேனை...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -