ஹில்ப் சமூக சேவை மன்றத்தின் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா




பாலமுனை செய்தியாளர் - எஸ்.எச்.தம்ஜீத்-


ஹில்ப் சமூக சேவை மன்றத்தினால் நடாத்தப்படும் ஹில்ப் இங்லிஸ் ஹவுஸ் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா விளையாட்டுப் போட்டிகளும், கௌரவிப்பு நிகழ்வும் அதன் தலைவர் எம்.ஜே.முஹம்மட் றிஸ்வான் (நுனுழு) தலைமையில் பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய திறந்த வெளிவளாகத்தில் அண்மையில் (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது ஹில்ப் இங்லிஸ் ஹவுஸ் மாணவர்களின் கண்கவர் விளையாட்டு நிகழ்வுகளும், வினோத உடை போட்டியும் இடம் பெற்றதுடன் இம்மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் பாலமுனையின் முதலாவது கணக்காளராக தெரிவான எம்.எப்.பர்ஹான் (ளுடுயுஉளு), முதல் பெண் சட்டத்தரணி ஆ.லு. றிஸ்மியா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டதுடன் பாலமுனையில் 2016ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளை எட்டிப்பிடித்த பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரியின் 09 மாணவர்களும், சின்னப்பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய 03 மாணவர்களுக்குமாக மொத்தம் 12 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் பிரதம அதிதி பணிப்பாளர் அல்ஹாஜ் முஆ. சுபைர் இணைப்பாளர் ளுடு. ஹபீல் மற்றும் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் நினவுச் சின்னங்கள் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளின் பணியக அம்பாரை மாவட்ட பணிப்பாளர் அல்ஹாஜ் முஆ. சுபைர் கலந்து கொண்டார். கொளரவ அதிதிகளாக பணியக வெளிக்கள உத்தியோகத்தர் ளுடு. ஹபீல், அக்கறைப்பற்று வலய முன்பள்ளி பருவ உதவிக்கல்வி பணிப்பாளர் ஆ.ஜமால்தீன், மின்ஹாஜ் மகாகா வித்தியாலய அதிபர் முடு. உபைத்துள்ளாஹ், இரைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் ஆஆ. முஸம்மில், அக்கறைப்பற்று மாநகர சபைக் கணக்காளர் ஆகு. பர்ஹான், ஓய்வு பெற்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் அல்ஹாஜ் . அப்துல் ஹபீல் ஆகியோரும் விஷேட அதிதிகளாக பாலமுனை மரண உபகார நிதியத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் ஐPஆ. ஜிப்ரி, பாலமுனை சீட்ஸ் அமைப்பின் தலைவரும், சின்னப்பாலமுனை ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பொருளாளருமான ஜனாப் ளுர். தம்ஜித் ளுசுஊ தலைவர் அன்சார்  அமைப்பின் அமைப்பாளர் . இர்பான்றைஸ்ட்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆர்ஆ. ஜெஸ்பர்,  யின் பாலமுனையின் அமைப்பாளர் டீஆ. ஹூசையிர் ), மெரூன்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் யு. அபசாலிஹ், சமூக ஆர்வாளர் யு. சதாத்  காலாமன்ற தலைவர் காலாபூசனம் பாலமுனை ஆதம், கலாசார மத்திய நிலைய தலைவர் ஐயு. சிறாஜ், ஹூசைனியா விளையாட்டுக் கழக தலைவர் சம்சுல் மக்கீன் ஜெலீல் மற்றும் சமூக அமைப்பின் பிரதி நிதிகள் மற்றும் மன்றத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -