அப்துல்சலாம் யாசீம்-
சுகாதார திணைக்களத்தின் துனை மருத்துவ சேவையினர் சுகாதார பரிசோதகர்களின் பாட விதானங்களை பொதுச்சுகாதார வௌிக்கள உத்தியோகத்தர்களின் பயிற்சி நெறியில் சேர்த்தமையை கண்டித்து நாளை (09) புதன்கிழமை நாடு தழுவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக துனை மருத்துவ சேவைகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதில் ஆய்வு கூட தொழிநுட்பவியலாளர்கள். மருந்தாளர்கள். இயன் மருத்துவப்பிரிவினர். கதிர் வீச்சு தொழிநுட்பவியலாளர்கள். ஆகியோர் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.