வீடமைப்பு திட்டங்கள் முழமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. - பட்ஜட் உரையில் திகாம்பரம்

சபாநாயகர் அவர்களே.... 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். 

இலங்கையின் பொருளாதார ஈட்டுதலில் முக்கிய பங்கினை வகித்துவரும் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு கடந்த கால வரவு செலவு திட்டங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் என்பன முன்மொழியப்பட்டிருந்தாலும் அவ்வேலைத்திட்டங்கள் முழமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. 

நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைத்த மலையக மக்கள் மீது கடந்த கால அரசாங்கத்தை விடவும் தற்போதைய அரசாங்கம் அதிகமாக கரிசனை கொண்டுள்ளது. இன்று நல்லாட்சியின் வரவு செலவு திட்டத்தினூடாக முன்மொழியப்படும் வேலைத்திட்டங்கள் மக்களை சென்றடைவதின் ஊடாக இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் எம் மீதும் நம்பிக்கையினை தோற்றுவிக்க முடியும். இதனையிட்டு இந்த அரசாங்கத்தில் குறித்த பெருந்தோட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் என்ற வகையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். 

ஊழல் மோசடிகள் மற்றும் அநாவசிய செலவுகள் காரணமாக எமது நாட்டின் கடன்கள் அதிகரித்த நிலையில் அதனை சரி செய்யும் பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உண்டு. கடந்த அரசாங்கத்தில் பெறப்பட்ட கடன்களை அடைப்பதற்காக பல்வேறு சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறன நிலையிலும் மக்களுக்கு பொருள் விலைக் கழிவு நிவாரணங்களையும் ஏனையதுறை சார்ந்த நிவாரணங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் முன்மொழிந்துள்ளது. ஆனாலும் எதிர்தரப்பினர் இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இன்று எதிர்த்தரப்பில் இருந்து விமர்சிக்கும் ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியினர் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்தபோது வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டதா என்பதை நினைவு படுத்தி பார்க்கவேண்டும். 

சபாநாயகர் அவர்களே.... அரச பெருந்தோட்டத் துறையானது 1992 இல் தனியார் மயப்படுத்தப்பட்டு பிராந்திய கம்பனிகளாக மாற்றப்பட்டு 25 வருடங்களில்; பாரிய நட்டத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிறது. பெருந்தோட்ட பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு பல்வேறு உபாயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத்துறையில் தொழில் புரிகின்ற மக்களின் பிரதிநிதி என்றவகையில் வரவேற்கின்றேன். பெருந்தோட்டத் துறையின் வருவாயினை உயர்த்துவதின் ஊடாகவே தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கவனம் செலுத்த முடியும். கடந்த ஒன்டறை வருடமாக சம்பள பேச்சுவார்த்தை இழுபறிநிலையில் இருந்தமைக்கு குறித்த தொழிற்சங்கத்தின் சுயநல அரசியல் காரணமாக அமைந்ததோடு பெருந்தோட்டத் துறை நட்டத்தில் இயங்குவதாகவும் சொல்லப்பட்டது. எனவே இது தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை சந்தோசமாக உள்ளது. 

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் என்பனவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியுள்ளோம். நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இது தொடர்பில் அதற்கு பொறுப்பான அமைச்சரிடமும் கலந்துரையாடியுள்ளோம். இந்த நிறுவனங்களில் காணப்படும் குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் என்பவற்றை மீள் கட்டமைப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்க கூடியது.

சபாநாயகர் அவர்களே.... இந்த வரவு செலவு திட்டத்தில் பெரிதும் பேசுபொருளாக அமைந்துள்ளமை கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீடுகளே. ஆசிரிய மாணவர்களுக்கான காப்புறுதி, டெப் உபகரணம், சேமிப்பு கணக்கு என கல்வி அபிவிருத்திக்கான பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. 

அனைவருக்கும் சமவாய்ப்பினைவழங்குகின்றதரமானசிறந்தகல்வியினைஒவ்வொருகுழந்தையும் பெற்றுக் கொள்வதற்கானஉரிமையினைஉறுதிசெய்யும் வகையில் ஆரம்பமற்றும் இரண்டாம் நிலைபாடசாலைகளினைஅபிவிருத்திசெய்வதற்கென 21000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடுபெருந்தோட்டபாடசாலைகளைதரமுயர்த்தும் நோக்குடன் 250 மில்லியன் ரூபாஒதுக்கீடுசெய்யஉத்தேசித்துள்ளது. இதனைநாம் வரவேற்கின்றோம். அதேவேளைபெருந்தோட்டபகுதிகளில் உள்ளபாடசாலைகள் தரமுயர்த்தபடாமையின் காரணமாகபாடசாலை இடைவிலகல் அதிகரித்துகாணப்படுகிறது. குறிப்பாககேகாலை இரத்தினபுரி,பதுளைபோன்றமாவட்டங்களில் இவ்வாறானநிலைமைகள் காணப்படுகின்றன. இது தொடர்பிலும் இந்தசபையின் கவனத்திற்குகொண்டுவருகின்றேன். 

உயர்தரத்தில் கற்பிக்கும் 28000 ஆசிரியர்களுக்கும் உயர்தரத்தில் கல்விகற்கும் 175000 மாணவர்களுக்கும் டெப் உபகரணம் வழங்கவுள்ளது. இது கல்வித்துறையில் வளர்ச்சியினைகாட்டுகின்றது. ஆனாலும் பெருந்தொட்டபகுதிகளுக்கெனவழங்கப்பட்டஆசிரியஉதவியாளர்களின் நிலைமைகவலைக்குரியதாகும். வெறுமனே 6000 ரூபாவினைகொண்டுஅவர்களுடையஅடிப்படைவசதிகளைக்கூட செய்துகொள்ளமுடியாதநிலைகாணப்படுகிறது. கல்வித்துறைக்கெனபாரியளவுநிதியொதுக்கீடுசெய்துள்ளஅரசாங்கம் அவர்களையும் கவனத்திற் கொண்டுஅவர்களின் கொடுப்பனவினைஉயர்த்துவதற்குநடவடிக்கைஎடுக்கஆவணம் செய்யவேண்டும். 

சபாநாயகர் அவர்களே.... பெருந்தோட்டபகுதிகளில் தற்பொழுதுதனிவீடுதொடர்பாககோரிக்கைகள் அதிகரித்துவிட்டன. பெருந்தோட்டபகுதிக்குபொறுப்பானஅமைச்சர் என்றவகையில் எனக்குவருகின்றகோரிக்கைகளில் பெரும்பாலானவை இந்தவீடமைப்புதிட்டத்திற்கானதாகவேஉள்ளன. சீரற்றகாலைநிலையினால் பாதிக்கப்பட்டு கஸ்டப்படும்,லயன் வாழ்க்கையில் முடங்கிகிடக்கும் மக்களுக்குவிடிவினைபெற்றுத்தரும் வகையில் 25000 வீடுகளைநிர்மாணிக்கநடவடிக்கைஎடுத்துள்ளது. இதற்குமுதன்கண் நன்றியினைதெரிவித்துக் கொள்கின்றேன். கடந்தகாலங்களில் 50000 வீடுகள் நிர்மானிக்கப்போவதாகமுன்மொழியப்பட்டாலும் அதுவெறுமனேமுன்மொழிவாகவேமாத்திரம் இருந்தது. பெருந்தோட்டமக்களுக்கெனபாரியளவுநிதியொதுக்கீடுசெய்துபெரியவீடமைப்புதிட்டத்தினைமுன்னெடுப்பதுவரலாற்றில் இதுவேமுதல்தடவையாகும்.

பெருந்தோட்டபகுதிகளில் வாழும் மக்கள் தங்களுக்கெனசொந்தமானகாணி இல்லாதகாணியுரிமைஅற்றவர்களாகவே இருந்துவந்துள்ளனர். லயன்களில் வசித்துவரும் ஒவ்வொருகுடும்பத்துக்கும் தெளிவானஉரித்துடன் 7 பர்ச்சஸ் காணியியைவழங்குவதற்கு இந்தஅரசாங்கம் நடவடிக்கைஎடுத்ததையிட்டுமகிழ்ச்சியடைகின்றோம். இதன் மூலமாகமலையகசமூகம் நிலவுரிமைஉடையசமூகமாகமாற்றம் பெற வழி பிறந்துள்ளதுஎன்றேஎண்ணுகின்றேன். 

விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் பயற்சிகளில் ஈடுபடுவோரின் செயலாற்றத்திறனைவிருத்திசெயற்வதற்காகசர்வதேசவிளையாட்டுவீரர்கள் மூலம் பயிற்சிஅளிக்கமுன்மொழியப்பட்டுள்ளது. நாட்டில் சிறந்ததொழில்நுட்பஉபரகரணவசதிகளைக் கொண்டஅத்தகையபயிற்சிநிலையமெதுவும் இல்லாதநிலையில் அத்தகையபயிற்சிநிலையம் ஒன்றினைநுவரெலியாவில் நிர்மாணிப்பதற்காக 500 மில்லியன் ரூபாஒதுக்கீடுசெய்யமுன்மொழியப்பட்டுள்ளமைநுவரெலியாமாவட்டமக்களாகியஎங்களுக்குமிகப்பெரும் வரபிரசாதமாகும். இதன் மூலமாகபெருந்தோட்டபுறங்களில் இலைமறைக்காயாக இருக்கும் விளையாட்டுவீரர்களைவெளிக்கொணரவாய்ப்பாகஅமையும் எனஎண்ணுகின்றேன். 

சபாநாயகர் அவர்களே....இந்தவரவுசெலவுதிட்டம் இலங்கையில் வாழும் அனைத்துமக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமைமுக்கியமானது. குறிப்பாகபெருந்தோட்டமக்கள் நலன் சார்ந்ததிட்டங்களைமுன்மொழிந்தமைக்குமீண்டும் ஒருமுறைநன்றி கூறிவிடைபெறுகின்றேன். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -