யாழில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவஞ்சலி..!

பாறுக் ஷிஹான்-
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் நேற்று நண்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வானது மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகி இறந்த மாணவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மெழுகுதிரி கொழுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பதில் துணைவேந்தர் வேல்நம்பி பதில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சுதாகரன்இ மாணவ ஆலோசகர் உதயகுமார் கலைப்பீட மாணவ ஒன்றியத் தலைவர் க.ரஜீவன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இவ் அஞ்சலி நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலர் வருகைதந்து அஞ்சலி செலுத்தினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -