புத்தர் சிலையும் கூடத்தையும் சேதமாக்கியவர்கள்???

கலைமகன் பைரூஸ்-
லங்கையில் தற்போது பூதாகரமாக்கப்பட்டு வருகின்ற , முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்ற கருப்பொருள், முஸ்லிம்களை முழுமையாக அழித்தொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கடைத்தனமான செயலாகும்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் என்ற இயக்கம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தியுள்ள ஒரு சில பேரினவாதிகள் சமூக வலைத்தளங்களினூடாக - குறிப்பாக முகநூலினுடாக இஸ்லாத்தையும், அல்லாஹ்வையும் படுமோசமாக இழிந்துரைத்துரைத்துக் கொண்டிருப்பதும், அவர்களில் சிங்கள நேயம்மிக்கவன் நான்தான் என்ற தோரணையில் ஒருவன் இனவாதம், மதவாதம் பேசிக் கொண்டு, இஸ்லாமியர்களைப் பூண்டோடு அழிப்பதாகவும், இஸ்லாமியர்களின் பொருளாதாரத்தை முழுமையாக அழிப்பதாகவும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றான்.

விரல் விட்டெண்ணக் கூடிய ஒரு சிலரை மட்டும் கொண்டு தம்பட்டம் அடித்து வந்த அவனுக்கு,ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டமானது வாய்க்கு சர்க்கரை போட்டாற் போன்றாகியுள்ளதனால், அவன் பலவாறாக நாளுக்கு நாள் பதிவுகளை இட்டு, சிங்களச் சமூகத்தில் சீரிய வழியில் நடக்கின்றவர்களையும், வீரிட்டெழுந்து முஸ்லிம்களுக்கு எதிராக ஆவன செய்வற்காக ஆவன செய்துள்ளது என்பதை யாரும் மறுக்கவியலாது.

இலங்கையில் நிலை இவ்வாறிருக்க, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையரான சிங்களவர்களும், முகநூலில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் முழுமையாக விமர்சித்தும்,கடுமையாகத் தூசித்தும் வருகின்றனர்.

மேலும், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தனிப்பட்ட முறையில் கருத்துரைத்துள்ளதோடு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைச் சேர்ந்த சிலரும்,அகில இலங்கை தௌஹீத் ஜமாத்தினரும் கூட கண்டனம் தெரிவித்திருப்பது யாமறிந்ததே.

இது இவ்வாறிருக்க, முஸ்லிம்களை எவ்வாறேனும் வம்புக்கு இழுக்க வேண்டும் எனும் நோக்கில் செயற்பட்டு வருகின்ற ஒரு சில சிங்களப் பேரினவாதிகள், அவர்களின் புனித ஸ்தலங்களிலும், வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களிலும் முஸ்லிம்கள் சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கதைகளை இட்டுக் கட்டினர். கடைசியில் ஊடகங்களும், புத்திஜீவிகளும் மேற்கொண்ட முன்னெடுப்பின் காரணமாக அதனது போலித்தன்மை அம்பலத்துக்கு வந்தமையும், பாரிய பிரச்சினைகள் முளைகொள்ளாமல் தடுக்கப்பட்டதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. 

இன்று, இலங்கைத் தேசிய கொடியிலிருந்து சிங்களவர்களல்லாத பிற இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளுடனும், கோஷங்களுடனும் இனவாதிகள் வலம்வருகின்றனர். சிங்கலே என்று தங்களை இனங்காட்டிக் கொண்டவர்களுக்கு இவ்விடயம், பாலில் தேன் கலந்தாற்போல் உள்ளது.

அவர்களுடைய அடுத்த இலக்காக, காத்தான்குடி மீது அவர்களின் பார்வை விழுந்துள்ளது. “காத்தான்குடியை அழிக்க அணிதிரண்டு என்னுடன்” வாருங்கள் என டான் பிரசாத் என்ற நாட்டுப்பற்றற்ற, இலங்கையிலும் இரத்த ஆற்றை பார்க்க ஆசைப்படுகின்ற ஒருவன் அறைகூவல் விடுத்து வருகின்றான். இவனது கோஷம் இவ்வாறாக இருந்தபோதும், அனைத்து இலங்கைச் சிங்களவர்களும் அவனுடன் சேர்வதற்கு கையாலாகாதவர்கள் அல்லர். அவனது கோஷத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூடிய மதகுருமார்களும், கல்வியியலாளர்களும், புத்திஜீவிகளும் கூட உள்ளனர்.

இஃது இவ்வாறிருக்க, சிங்களவர்களைக் கிளர்ந்தெழச் செய்து இலங்கை முழுவதும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களும், சொத்துக்களும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற நப்பாசையில் அடாவடித்தனங்களும் மேடையேறிக் கொண்டிருக்கின்றன. அதற்காக பல்வேறுபட்ட கருமங்களும் ஆற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதன் ஒரு கட்டமாகவே, கொழும்பு கோட்டை ஸ்ரீசம்­புத்­தா­லோக விகா­ரையின் புகையிரத பாதையை நோக்­கி­ய­வாறு காணப்­படும் புத்தர் சிலை­யுடன் அச்­சிலை பிர­திஷ்டை செய்­யப்­பட்­டி­ருந்த கூட­மொன்றும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது எனக் ஊகிக்கலாம். 

இப்­புத்­தர்­சிலை இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் அக்­கூ­டத்­தி­லி­ருந்து கீழே தள்­ளி­வி­டப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த விகா­ரையின் விகா­ரா­தி­பதி சாஸ்­ர­பதி விதா­ரந்­தெ­னிய மேதா­னந்த தேரர் தெரி­வித்­துள்ளபோதும், சிங்களவர்களிடையே இதற்கான சூத்திரதாரிகள் முஸ்லிம்களில் ஒரு பகுதியினரே என்பதைக் காட்ட வேண்டும் என்பதே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றவர்களின் கருதுகோளாக இருக்கலாம். என்றாலும் புத்திஜீவிகள் இதுதொடர்பில் தெளிவாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், சூத்திரதாரிகளின் கையாலாகாத வேலைகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதனால், இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் கவனமாகவும், தூர நோக்கத்துடனும் செயற்பட வேண்டியது இன்றைய மாபெரும் தேவையாக இருக்கின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -